"எதிர் எழுந்து
உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும்,
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து, அடும் உழுவை
பாய்ந்து,
அதிர் எழுந்து, உயர் வரை நடுங்குப அரிது உடன்று என, இடி
இடித்து,
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே. |
"நச்சுதனுக்கு
எதிராக எழுந்து உயர்ந்த தேரில் நின்று போரிட
மாறுபட்டு வந்த நிகலனும், கதிர் வீசி எரியும் நெருப்புப் போல் அழுந்திய
சினம் மிகுந்து, கொல்லும் தன்மையுள்ள புலி பாய்ந்து முழங்கி எழுந்து,
உயர்ந்த மலைகளும் நடுங்க அரிய திறமையோடு போரிட்டது போல்,
இடிபோல் தானும் முழங்கி, சிதறி எழும் நெருப்பை உமிழ்வது போன்ற
அம்புகளைக்கொண்டு எங்கும் உயிர்களை விழுங்கினான்.
155 |
சொரியி
ரத்தமொ டெரிபி லிற்றிய சுளியெ யிற்றட லதிருமோ
ரரிய ரட்டிய வமர்மு கத்தெதி ரழலு டற்றிய வதைவளர்
வரியெ திர்த்தென வலிய சச்சுதன் வருமு கத்தெதிர் நிகலன்வந்
தெரியெ ரித்தன வுலறு முட்கழை யிருசு ரத்தென வமர்செய்வார். |
|
"சொரி இரத்தமொடு
எரி பிலிற்றிய சுளி எயிற்று அடல் அதிரும் ஓர்
அரி இரட்டிய அமர் முகத்து, எதிர் அழல் உடற்றிய வதை வளர்
வரி எதிர்த்து என, வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து,
எரி எரித்தன, உலறும் முள் கழை இரு சுரத்து, என அமர் செய்வார். |
"சொரியும்
குருதியோடு நெருப்பையும் கக்கிய சினமுள்ள பல்லின்
வலிமையால் அதிரச் செய்யும் ஓர் அரிமா முழங்கி நின்ற போர் முகத்து,
அதற்கு எதிராக நெருப்பைக் கக்கிய தன்மையாய்ச் சினந்த கொலைத்
தொழில் வளரும் வேங்கை எதிர்த்து நின்றதுபோல, வலிமை வாய்ந்த
சச்சுதன் வரும் முகத்து எதிரே நிகலனும் வந்து, முள்ளுள்ள உலர்ந்த
மூங்கில்களைக் கொண்டுள்ள இரு காடுகளை இரண்டு நெருப்புகள்
சேர்ந்து எரித்தன என்று கொள்ளுமாறு அவ்விருவரும் போர் செய்வர்.
|