பூந் தாமக் கொம்பு
அனையாள், பூத்த பைம் பூ முகை முகத்தின்
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து, இன்னும் எண் நாள் செல,
அன்னார்
தாம் தாமக் கடி நகர்க்கண் தங்கல் உள்ளி, நாள்தொறும், பொன்
காந்து ஆம் அக் கோயில் விழா அணியின் வெஃகிக் கனி சேர்வார். |
ஒளியுள்ள
பூங்கொம்பு போன்ற மரியாள், பூக்கும் பருவத்துப்
பசுமையான மலர் மொட்டுப் போன்ற முகங் கொண்டு தேன் நிறைந்த
மாலை போன்ற திரு மகனைக் காணிக்கையாக நேர்ந்தபின், மேலும் எட்டு
நாட்கள் அக்கோவிலுக்குச் செல்ல வசதியாக, அம்மூவரும் ஒளி பொருந்திய
மதிற் காவலுள்ள அந்நகரில் தங்க நினைந்து, பொன்னொளி கொண்ட
அக்கோவிலுக்கு நாள்தோறும் விழாக் கோலம் காண்பது போன்ற விருப்பத்
தோடு இனிதே சென்று சேர்வர்.
தேன்
+ தாமம் - தேந்தாமம். ஒளியைக் குறிக்கும் 'காந்தம்' என்ற
சொல், 'காந்து' எனக் கடைக்குறையாய் நின்றது.
3 |
நெஞ்சுபதி
கொண்டவரு ளெஞ்சா நீரார் நிறைந்தைந்நாண்
மஞ்சுபதி கொண்டமலை யொத்த பைம்பூ மணிப்புகைசூழ்
விஞ்சுபதி கொண்டமரர் வைகுங் கோயில் மேவியபின்
னஞ்சுபதி கொண்டவுரைத் தூது வானோ னவின்றடைந்தான். |
|
நெஞ்சு பதி
கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐந் நாள்,
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த, பைம் பூ மணிப் புகை சூழ்
விஞ்சு பதி கொண்டு அமரர் வைகும் கோயில், மேவிய பின்,
நஞ்சு பதி கொண்ட உரைத் தூது வானோன் நவின்று அடைந்தான்.
|
மேகங்கள்
குடி கொண்ட மலை போன்று, பசுமையான மலர் போல்
மெல்லிய அழகிய வாசனைப் புகைகள் சுற்றிலும் மண்டும் பதியாகக்
கொண்டு வானவர் தங்கும் திருக் கோவிலுக்கு, தம் நெஞ்சில் குடி
கொண்ட அருள் என்றும் நீங்காத இயல்புள்ள அம்மூவரும் நிறைவாக
ஐந்து நாட்கள் சென்று வந்த பின், ஒரு வானவன் நஞ்சு குடிகொண்ட
தூது மொழியைக்கூறியவாறு வந்து சேர்ந்தான்.
|