"கரிய உச்சியைக்
கொண்ட மேகத்தினின்று மின்னலோடு
நெருப்பையும் உமிழ்ந்து இறங்கிப் பாயும் இடிபோல, வெல்லுதற்கரிய
சச்சுதன் தன் யானையினின்று இறங்கி, நெருப்பைக் கக்கும் வாளைச்
சுழற்றிக் கொண்டு, கொல்லுதற்குரிய நஞ்சைக் கொண்டுள்ள நாகம்
போன்று அந்நிகலனின் தேர்மீது தான் ஏறிக்கொண்டு, அவன்
உடலைப்பிளந்து, எதிரிப் படையெல்லாம் அச்சத்தோடு தோற்று
ஓடும்படி, உள்ளம் சினந்து, அவனது தேரைத் தானே விரைந்து செலுத்தினான்.
நச்சரவு
- நஞ்சு + அரவு; நச்சு + அரவு - நச்சரவு.
சோசுவன்
- அதுனீசதன் போர்
புளிமா, கூவிளம்,
கருவிளம், கருவிளம், புளிமா, கூவிளம்,
கருவிளம், கருவிளம்.
158 |
இருமு கத்திவை
யிவரலி னடுவுள வெரிமு கத்திரு நிருபரு
மெதிரெதிர்
பொருமு கத்தெழு முரசொலி வளையொலி புரவி மிக்கொலி
கரியொலி
குயவொலி
செருமு கத்திவை மருளிய வெருவொடு சிலைவ ளைத்தொலி
யெழவிழு
மழையொலி
யொருமு கத்தினு நிகரில முரிவில வுரைமு கத்தடை யளவில
வமர்செய்வார். |
|
"இரு முகத்து இவை
இவரலின், நடு உள எரி முகத்து இரு நிருபரும்
எதிர்
எதிர்
பொரு முகத்து எழும் முரசு ஒலி, வளை ஒலி, புரவி மிக்க ஒலி, கரி
ஒலி,
குயவு ஒலி
செரு முகத்து இவை மருளிய வெருவொடு, சிலை வளைத்து ஒலி எழ
விழும்
மழை ஒலி
ஒரு முகத்தினும் நிகர் இல, முரிவு இல, உரை முகத்து அடை அளவு
இல
அமர் செய்வார். |
"படையணிகளின்
இரு பக்கத்தும் இவை நிகழ்ந்து
கொண்டிருக்கையில், நடு்ப் பக்கத்தில் உள்ள சினந்த முகங்கொண்ட
சோசுவனும் அதுனீசதனுமாகிய மன்னர் இருவரும் எதிரெதிராக நின்று
போரிட்டனர். அப்பொழுது எழுந்த முரசொலியும், சங்கொலியும்,
குதிரைகளின் மிகுந்த ஒலியும், யானைகளின் ஒலியும், தேர்களின்
ஒலியுமாகப்
|