பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்209

"வெளி முகத்து எழு கணை மழை இருள் இட, விளி முகத்து எழு
                                  கொடிது ஒலி செவி அட,
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நரபதி இருவரும்
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அறச் சமர் பொருதலின்,
                                          ஒருவன் வந்து,
'இளி முகத்து எழு சிறை முரிவன' என, இள மதிப் பிறை முடியினன்
                                  அலறினான்.

     "ஆகாயத்தில் பாய்ந்து சென்ற அம்பு மழை இருளைச் செய்யவும்,
படை வீரர் சாகுமிடத்து எழும் கொடிய ஓசை செவியைத் தாக்கவுமாக,
காற்றின் முகத்தே பொங்கி எழுந்த கடலின் அலை போலக் கொலைத்
தொழிலோடு போரிட்ட அரசர் இருவரும் சினந்த முகத்தோடு சீறி எழுந்த
படை வீரரும் முறிந்தோடாமல் ஒப்பில்லாத போரை நிகழ்த்திக்
கொண்டிருக்கையில், ஒருவன் ஓடி வந்து, 'எழுந்து நின்ற நம் இரு
பக்கத்துப் படைகளும் இழிவான முறையில் முறிந்து ஓடுவன ஆயின'
என்று சொல்லவும், இளம் பிறை பதித்த முடியை அணிந்த அதுனீசதன்
அலறினான்.

     நதி பதி - ஆறுகளின் தலைவன் : கடல். நர பதி - மக்கள்
தலைவன்; அரசன்.

                     162
கதமி கப்பட ரிரதமு மதிர்குப கழல்பு டைத்தன னழலெழ                                         வளவறப்
பதமி கத்தனு வளையவு மிருதுணி படம றுத்தட லொருசிலை                                         வளையுமுன்
சதமி கப்பதி மறையர சிடுகணை சடுதி தைத்தன வளவில                                         வுடலெலா
மதமி கக்கரி யெனவொலி யிடவவன் மருளி முட்கிரி கிடியுரு                                         நிகருவான்.
 
"கதம் மிகப் படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல்
                                   எழ அளவு அற
பதம் மிகத் தனு வளையவும் இரு துணி பட, மறுத்து அடல் ஒரு
                                   சிலை வளையுமுன்,
சதம் மிகப் பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு இல
                                   உடல் எலாம்.
மதம் மிகக் கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி திடி உரு
                                   நிகருவான்.