பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்210

     "தனக்குச் சினம் மிகவே அதுனீசதன் தான் ஏறியிருந்த தேரும்
அதிருமாறு நெருப்புப் பொறி பறக்கக் காலால் உதைத்தான். ஏற்ற
பதத்தினும் மிகுதியாக அளவில்லாது தன் வில்லை அவன் வளைக்கவே,
அது இரு துண்டுகளாய் ஒடிந்தது. மீண்டும் வலிமை வாய்ந்த மற்றொரு
வில்லை அவன் வளைக்கு முன், பதிந்து நின்ற வேத மன்னனாகிய
சோசுவன் நூறினும் மிகுதியாக ஏவிய அம்புகள் விரைவில் அளவில்லாது
அவன் உடலெல்லாம் தைத்தன. அவன் அது கண்டு மருண்டு, மதம்
மிகுந்த யானைபோல் முழங்கி, முள்ளம் பன்றியைப் போலத் தோன்றி நின்றான்.


                    163
குருதி மிக்குக மலைமிசை துகிரது கொடிமு ளைத்தென
                                வுயரிய விரதமேற்
கருதி மிக்குறு நிலைபல பயனில கதறி நிற்பவன் விழிவழி
                                யழலெழ
விருதி னுய்த்தன பிறையுணு மரவென விடுச ரத்தொடு
                                மறவிழ மறுகணை
பருதி மொய்க்கடல் முழுகென வொளிமுடி பரிய விட்டன
                                றைமுண ரிறைவனே.
 
"குருதி மிக்கு உக, மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என,
                                   உயரிய இரத மேல்
கருதி, மிக்கு உறு நிலை பல பயன் இல, கதறி நிற்பவன் விழி வழி
                                   அழல் எழ,
விருதின் உய்த்தன பிறை உணும் அரவு என விடு சரத்தொடும் அற
                                   விழ, மறு கணை,
பருதி மொய்க் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம்
                                   உணர் இறைவனே.

     "தன் உடலினின்று உதிரம் மிகுதியாகச் சொரிய, மலையின் மீது
பவளக்கொடி முளைத்தது போல், உயர்ந்த தேரின்மேல் நின்று ஆராய்ந்து,
தன்னாலான மிகச் சிறந்த போர் முறை பலவும் பயனற்றுப்போய், தன்
கண்வழியே கனல்பறக்க அதுனீசதன் கதறி நின்றான். அறம் உணர்ந்த
அரசனாகிய சோசுவன், அவ்வாறு நிற்பவனது விருதாக அமைந்த பிறையை
உண்ணும் அரவு போலத் தான் ஏவிய அம்பினால் அப்பிறை அறுந்து
விழவும், அலைகள் மொய்த்த கடலில் கதிரவன் முழுகுவதுபோல் அவனது
ஒளி பொருந்திய முடியும் அறுந்து விழுமாறு மற்றும் ஓர் அம்பை ஏவினான்.