பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்211

                   164
பிறைபு தைத்தன முடிவிழ வுளமறு பிணிபு தைத்தன விறையவ
                              னலறிநன்
னறைபு தைத்தன சிகழிகை மெலிதர நனியு ரத்தழ லெழமிகு                               வெகுளியின்
கறைபு தைத்தன விடநுனி வசிமிகு கணையெ டுத்துன துயர்முடி
                              புனைவலென்
றுறைபு தைத்தன முகிலென வுறுமிவில் லுடல்பு தைத்தெழ
                              விசையினொ டெழுதினான்.
 
"பிறை புதைத்தன முடி விழ, உளம் அறு பிணி புதைத்தன
                                   இறையவன் அலறி, நல்
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு
                                   வெகுளியின்,
'கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து, உனது உயர்
                                   முடி புனைவல்' என்று,
உறை புதைத்தன முகில் என உறுமி, வில் உடல் புதைத்து எழ
                                          விசையினொடு எழுதினான்

     "பிறை பதித்திருந்த தனது முடியும் அறுந்து விழவே, தன் ஊக்கம்
அறுவதற்குக் காரணமான துன்பத்துள் மூழ்கிய அதுனீசத மன்னன் அலறி,
நல்ல மணம் பொருந்திய மாலை வாடுமாறு தன் நெஞ்சில் மிகுதியான
நெருப்பு எழத் தக்க மிக்க சீற்றத்தினால், குருதிக் கறை படிந்ததும் நஞ்சு
தோய்ந்த நுனியை உடையதுமாய்க் கூர்மை மிக்க இவ்வம்பினை எடுத்து,
உனது உயர்ந்த முடியின்மீது அணிவிப்பேன்!" என்று கூறிய வண்ணம்,
மழைத் துளியை உள்ளடக்கிய மேகம் போல் உறுமி, அவ்வம்பு வில்லின்
உடலுள் மறைந்து எழத் தக்க விசையோடு ஏவினான்.

     புதைத்தன - புதைத்த: இடையே 'அன்' சாரியை.

                     165
தனையு தைத்தன தனுமுழு தகல்முனர் சரமு தைத்தற
                               வெதிர்சர மெழுதினன்
முனையு தைத்தன வரியென வெதிரிலன் மொழிம றுத்திது
                               முடிபுனை கெனமறு
கனையு தைத்தன பிறையென வளைவுள கணையு தைத்திட
                               நுதலொடு தலைபக
வினையு தைத்தன வுயிர்விடு மிறையவன் விழவு தைத்தென
                               முரிவன படைகளே.