"தனை உதைத்து
அன தனு முழுது அகல் முனர், சரம் உதைத்து
அற
எதிர் சரம் எழுதினன்
முனை உதைத்தன அரி என எதிர் இலன். மொழி மறுத்து, 'இது
முடி
புனைக!' என, மறு,
கனை உதைத்தன பிறை என வளைவு உள, கணை உதைத்திட,
நுதலொடு
தலைபக,
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ, உழைத்து
என
முரிவன படைகளே |
"தன்னை ஏவிய
வில்லை உதைத்து அவ்வம்பு முழுதும் வெளிப்படு
முன்னே, போரில் எவ்விலங்கையும் உதைத்து வெல்லும் சிங்கம்போல்
தனக்கு எதிர்யாரும் இல்லாத சோசுவன், அவ்வம்பை உதைத்து
அறுக்குமாறு எதிரம்பு ஏவினான். பின், அதுனீசதனின் வீரமொழியை
மறுத்த தன்மையாய், 'இதனை முடியாக அணிந்து கொள்வாயாக' என்று
கூறி, பிறைபோல் வளைவான மற்று ஓர் அம்பை ஒலி எழும்படி
செலுத்தவே, தன் நெற்றி நடுவோடு தலை பிளந்து. தன் தீவினையே
தன்னை உதைத்தாற்போல், அம்மன்னன் உயிர் விட்டுக் கீழே விழுந்தான்.
அவன் விழவே, விரட்டியடித்தாற்போல் அவன் படைகளும் முறிந்து ஓடின.
166 |
உழையெ னப்படை
முரிதர வரியென வுடறி மொய்த்தன மறையின ரிடையிடை
மழையெ னத்தொடு கணையொடு பலபடை வழிவ குத்துயி ரளவில
வனிலமுன்
றழையெ னப்பட வுதிரமு மலையொடு ததைய விட்டிசை யிறையவன்
வெகுளிமுன்
பிழையெ னப்படை வகைவகை மடிவன பெருகு தற்கொரு நிகரிட
வளவதோ. |
|
"உழை எனப் படை
முரிதர, அரி என உடறி மொய்த்தன மறையினர்
இடை
இடை
மழை எனத் தொடு கணையொடு பல படை வழி வகுத்து, உயிர்
அளவு
இல அனிலமுன்
தழை எனப் பட, உதிரமும் அலையொடு ததைய விட்டு, இசை
இறையவன்
வெகுளி முன்
பிழை எனப் படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட
அளவதோ?
|
|