"முடியொடு முடி
பட வரை முனைவன என,
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்.
படியொடு பிரி பருப்பதம் என, அசனியின்
வெடியொடு, மழை என விழுவன உபலமே. |
"சிகரத்தோடு
சிகரம் மோத மலைகள் தம்முள் போரிடுவது போல்,
இடியோடு சினம் முதிர்ந்த நெருப்போடு கூடிய மேகங்கள் தம்முள்
எதிர்த்துப் போரிடும். அதனால் மண்ணை விட்டுப் பெயர்ந்து சிதறும்
மலை போல், இடியின் வெடியோசையோடு, பெருங்கற்கள் மழை போலச்
சிதறிவிழும்.
171 |
துறுவன வலியகல்
துகளெழ விரதமு
மிறுவன கரிபரி யினமின மடிவன
வறுவன படையின மழிவனர் பகையவ
ருறுவன விடிகளொ டுடனவை யெரிவன. |
|
"துறுவன வலிய
கல் துகள் எழ இரதமும்
இறுவன; கரி பரி இனம் இனம் மடிவன;
அறுவன படை இனம்; அழிவனர் பகையவர்.
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன. |
"நெருக்கமாய்
விழும் பெரிய கற்களால் தேர்களும் ஒடிந்து தூளாகிச்
சிதறும். யானைகளும் குதிரைகளும் கூட்டங் கூட்டமாய் மடியும்; படைக்
கருவி வகைகள் ஒடியும்; பகைவரெல்லாம் அழிவர். அவையெல்லாம் மேலும்
விழும் இடிகளோடு சேர்ந்து எரியும்.
172 |
கடியொலி
யெழவிழு கலினுறை படுமொலி
யிடியொலி யிடியினு மிறுமிர தமதொலி
மடிகரி யெழுமொலி மடிபரி யெழுமொலி
முடிவில விளிகுவர் முதிரொலி நிகரில. |
|
"கடி ஒலி எழ
விழு கலின் உறை படும் ஒலி,
இடி ஒலி, இடியினும் இறும் இரதமது ஒலி,
மடி கரி எழும் ஒலி, மடி பரி எழும் ஒலி,
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல. |
|