பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்219

                    இப்பாலனே அவ்விறைவன்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                     179
ஊன்முகஞ் செறித்த வெம்போ ருடன்றிவை யனைத்துஞ்                                       செய்தோன்
வான்முகஞ் செறித்த வாழ்க்கை வகுப்பவீங் கிளவலாகத்
தேன்முகஞ் செறித்த பைம்பூந் திருமுகை முகத்திற் றோன்றித்
தான்முகஞ் செறித்த வன்பின் றகவுகு மிவன்றா னென்றான்.
 
"ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும்                                              செய்தோன்,
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப, ஈங்கு இளவலாகத்
தேன் முகம் செறித்த பைம் பூந் திரு முகை முகத்தில் தோன்றி,
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான்!" என்றான்.

     "பகைவர் ஊனிடத்துத் துன்பம் செறியக் காரணமான கொடிய போரில்
சினங்கொண்டு இவை அனைத்தும் செய்தவன், வானுலகில் செறிந்து கிடந்த
பேரின்ப வாழ்க்கையை இம் மண்ணவர்க்கு வழங்குமாறு, தேனைத் தன்னுள்
செறியக்கொண்ட பசுமையான மலரின் அழகிய மொட்டுப் போன்ற
முகத்தோடு இங்குச் சிறுவனாய் வந்துதித்து, தான் தன்னிடத்துச் செறியக்
கொண்ட அன்பின் தகைமை பொழிய விளங்கும் இவனே!" என்று மிக்கயேல்
முடித்துக் கூறினான்.

                     180
புண்கனிந் தாற்றி னாற்போற் புண்கணீத் துவப்பச் சூசை
பண்கனிந் திசைத்த தேபோற் பாகினு மினிய சொல்லாற்
கண்கனிந் துவப்பத் தெள்ளார் கதிர்க்கிழி பொறித்த
                                        தேபோல்
விண்கனிந் தாய காதை விரித்தடி பணிந்தான் வானோன்.
 
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்பச் சூசை,
பண் கனிந்து இசைத்ததே போல், பாகினும் இனிய சொல்லால்,
கண் கனிந்து உவப்பத்தெள் ஆர் கதிர்க் கிழி பொறித்ததே போல்,
விண் கனிந்து ஆய காதை, விரித்து அடி பணிந்தான், வானோன்.