மரு மணித் தொடை
யாழ் ஏந்தி, மரகத மணித் தாள் வைத்த
பரு மணிக் காந்தள் கையால் பயிர் அளி கிளை போல் கீதம்
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப, வானோர்,
திரு மணிச் சாயல் தாய் தன் சிறுவனைப் பாடினாளே. |
வானோர், மணமும்
அழகும் கொண்ட மாலை சூட்டிய யாழைக்
கையில் ஏந்தி, மரகத மணி போல் பசுமையான தண்டின்மேற் பொருந்திய
பருமையான அழகிய கார்த்திகைப் பூப் போன்ற கை விரல்களால், இரையும்
வண்டுகளின் கூட்டம் போல் பாடலை வழங்கும் அழகிய நரம்புகளின்மேல்
எட்டு வகையான தகுதி வாய்ந்த இசையை எழுப்பினர். அதனோடு இசைய,
அழகிய மணி போன்ற சாயல் கொண்ட தாய் தன் மகனைப் பின் வருமாறு
பாடினாள்;
எண்
வகை இசைகளாவன; படர்தல், உலாவல், வடித்தல், உந்தல்,
உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல்.
மரியாள்
சிறுவனைப் பாடல்
கருவிளம், கருவிளங்காய்,
கருவிளம், கருவிளங்காய்
183 |
மருடரு வலியுருவே
மருளறு சினவுருவே
யருடரு தயையுருவே யளவறு திருவுருவே
தெருடரு கலையுருவே செயிரறு மனுவுருவே
பொருடரு மணியுருவே பொழிமண
வடிதொழுதேன். |
|
"மருள் தரு வலி
உருவே, மருள் அறு சின உருவே,
அருள் தரு தயை உருவே, அளவு அறு திரு உருவே,
தெருள் தரு கலை உருவே, செயிர் அறு மனு உருவே,
பொருள் தரு மணி உருவே, பொழி மண அடி
தொழுதேன்! |
"யாவருக்கும்
மயக்கம் விளைவிக்கும் வல்லமை வடிவானனே,
மயங்குதல் அற்ற சினத்தின் வடிவமே, அருளைப் பொழியும் தயவின்
வடிவமே, அளவற்ற செல்வத்தின் வடிவமே, தெளிவைத் தரும் கல்வி
வடிவமே, பாவத்தை அறுக்க வந்த மனித வடிவமே, பொன்னிற் பதித்த
மாணிக்க வடிவமே, மணம் பொழியும் உனது திருவடிகளைத் தொழுதேன்.
|