களிரிமாபுரம்
சேர்தல்
- விளம், -
மா, தேமா, - விளம், - மா, தேமா
186 |
காய்முகத்
துறைநீர் போலுங் கங்கிலின் விளக்குப் போலு
நோய்முகத் துலன்ற நெஞ்சார் நுனித்தெழ விவையங் காகிச்
சேய்முகத் துயிரிற் கான்ற செழுங்கதிர் தெளிப்ப மாந்திப்
போய்முகத் தெதிர்ந்த நாடு புக்குநீ ணெறியே போனார். |
|
காய் முகத்து
உறை நீர் போலும், கங்குலின் விளக்குப் போலும்
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ, இவை
அங்கு
ஆகி,
சேய் முகத்து உயிரின் கான்ற செழுங் கதிர் தெளிப்ப மாந்தி,
போய், முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார். |
துன்பத்தினிடையே
துவண்ட நெஞ்சம் கொண்ட சூசையும்
மரியாளும் நிமிர்ந்து எழுமாறு, வெயில் காய்ந்த விடத்துப் பெய்த மழை நீர்
போலும், இருளின் முகத்தே ஏற்றிய விளக்குப் போலும், இவை யெல்லாம்
அங்கு நிகழ்ந்தன. பின்னர், தம் மகனின் திரு முகத்தினின்று வெளிப்பட்ட
செழுமையான கதிரொளியைத் தெளிவுபெற உண்டு, அங்கிருந்து அகன்று,
தம் முகத்தெதிரே நீண்டு கடந்த நாட்டில் புகுந்து நீண்ட வழி நடந்து
போயினர்.
187 |
ஒழித்தெனச் சுடர்நீர் மூழ்க வுலகிருட் போர்ப்பக் கஞ்சந்
தெழித்தெனக் கதவ டைப்பச் செழும்பொழிற் பறவை யார்ப்ப
விழித்தெனக் கண்களாக மீனலம் வானம் பூப்பக்
கழித்தென நெடுஞ்செல் வப்பாற் களரிமா புரத்திற் சேர்ந்தார். |
|