ஒழித்து எனச்
சுடர் நீர் மூழ்க, உலகு இருள் போர்ப்ப, கஞ்சம்
தெழித்து எனக் கதவு அடைப்ப, செழும் பொழில் பறவை ஆர்ப்ப,
விழித்து எனக் கண்களாக மீன் நலம் வானம் பூப்ப,
கழித்து என நெடுஞ் செல்வு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார். |
ஓழித்துக் கட்டியதுபோல்
கதிரவன் கடலுள் மூழ்க, உலகமெல்லாம்
இருள் மூடிக்கொள்ளவும், தாமரை அதட்டப்பட்டது போல் தன்
இதழ்க்கதவை மூடிக்கொள்ளவும், செழுமையான சோலையில் பறவைகள்
ஆரவாரம் செய்யவும், விழித்துப் பார்ப்பதுபோல் வானம் கண்களாக
விண்மீன்களை நலமாகப் பூத்து நிற்கவுமாக, நடந்து கழித்து விட்ட
தன்மையாக நெடும் பயணதிற்கு அப்பால் அவர்கள் களரிமாபுரம் சென்று
சேர்ந்தனர்.
சோசுவன்
வெற்றிப் படலம் முற்றும்.
ஆகப்
படலம் 15க்குப் பாடல்கள் 1592
|