பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்226

                  2
தாளுறு வருத்த மோம்பித் தலைவிரி கதலி முற்றி
நீளுறு கனிகண் மாந்தி நெடும்பசிப் பரிவு மாற்றி
வாளுறு கதிரா லெங்கு மல்கிய விருளைப் போழ்ந்து
கோளுறு திங்கள் வான்மேற் குளிர்முகங் காட்டிற்
                                    றன்றே:
 
தாள் உறு வருத்தம் ஓம்பி, தலை விரி கதலி முற்றி
நீள் உறு கனிகள் மாந்தி நெடும் பசிப் பரிவும் ஆற்றி,
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளைப் போழ்ந்து,
கோள் உறு திங்கள், வான் மேல் குளிர் முகம் காட்டிற்று
                                         அன்றே.

     நடையால் தம் கால்கள் கொண்ட வருத்தத்தைத் தீர்த்துக் கொண்டு,
இலைகளால் தலை விரித்து நின்ற வாழை மரத்தில் முற்றி நீண்டு கிடந்த
பழங்களை உண்டு நெடு நேரப் பசித் துன்பத்தையும் போக்கிக்
கொண்டனர். அப்பொழுது, நிறைவு கொண்டுள்ள நிலா, தன் வாள் போன்ற
கதிர்களால் எங்கும் நிறைந்து கிடந்த இருளைப் பிளந்து, வானத்தில் குளிர்
முகங்காட்டி எழுந்தது.

     'அன்றே' அசைநிலை.

                     3
கோள்கடைந் தழுத்தி னாற்போற் கொழுமணி யழுத்தி
                                         வைத்த
தாள் கடைந் தழுத்திப் பைம்பொற் றவழ் கதிர்ப் பவளத்
                                         தூணில்
வாள்கடைந் தழுத்தி னாற்போன் மதிசொரி பசும்பாற் கற்றை
பீள் கடைந் தழுத்திப் பாயும் பெருங் கதிர் சூசை கண்டான்.
 
கோள் கடைந்து அழுத்தினாற் போல் கொழு மணி அழுத்தி வைத்த,
தாள் கடைந்து அழுத்திப்பைம் பொன், தவழ் கதிர்ப் பவளத் தூணில்,
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை
பீள் கடைந்து அழுத்தி, பாயும் பெருங் கதிர் சூசை கண்டான்.