நவக் கிரகங்களைக்
கடைந்து பதித்தாற்போலக் கொழுமையான நவ
மணிகளைச் சூழப் பதித்து வைத்துள்ளதும், அடியைக் கடைந்து பசும்
பொன்னால் பொதிந்து வைத்துள்ளதும், சுற்றிலும் தவழ்ந்து பரவும் தன்
கதிரொளியைக் கொண்டதுமான ஒரு பவளத் தூணில், ஒளியைக் கடைந்து
பதித்தாற்போல் வெண்நிலா சொரியும் பசுமையான பால் போன்ற ஒளித்
திரள் அதன் உட்கருவைக் கடைந்து காட்டிய தன்மையாய் அதன் மேல்
அழுந்தப் பதிந்து, அதனால் எங்கும் பாய்ந்து பரவும் பெருங்கதிரொளியைச்
சூசை கண்டான்.
4 |
மணிநிலைப்
புரத்தின் வாயின் மணிக்கதிர்த் தூணு நிற்ப
வணிநிலைப் பவளத் தூண்மே லவிர்மணிப் பாவை நின்று
பணிநிலைப் பசும்பொற் காளம் பதிமணித் தீப மோடு
துணிநிலைப் பசும்பூங் காந்தட் டுணைக்கையி றாங்கக்
கண்டான். |
|
மணி நிலைப்
புரத்தின் வாயில், மணிக் கதிர்த் தூணும் நிற்ப,
அணி நிலைப் பவளத் தூண் மேல் அவிர் மணிப் பாவை நின்று,
பணி நிலைப் பசும் பொற் காளம், பதி மணித் தீபமோடு,
துணி நிலை பசிம் பூங் காந்தள் துணைக் கையில் தாங்கக்
கண்டான். |
மணிகள் பதித்த
நிலையைக் கொண்ட அக்களரிமாபுரத்தின் வாயில்
அருகே, நவமணிகள் கதிர் பரப்பும் அத்தூணும் நிற்க, அழகிய தோற்றம்
கொண்ட அப்பவளத் தூணின்மேல் ஒளிரும் மணிகளால் அமைந்த ஒரு
பெண் உருவம் நிற்கவும், வேலைப்பாடு நிறைந்த பசும் பொன்னாலாகிய
எக்காளம் ஒன்றை, மணிகள் பதித்து அமைத்த ஒரு தூளக்கோடு, துணிச்சல்
காட்டும் நிமிர்ந்த நிலையில், பசுமையான காந்தள் மலர் போன்ற தன் இரு
கைகளில் அது தாங்கி நிற்கவும் கண்டான்.
5 |
கதிரெழு
முருவி னின்ற கபிரிய றன்னை நோக்கிப்
பொதிரெழும் பவளத் தூண்மேற் பொன்மணித் தீபங் காள
மெதிரெழு மணிபொற் பாவை யேந்திய துரைமோ வென்னப்
பிதிரெழுங் கதிரின் வானோன் பிழிமொழி பிலிற்றிச்
சொல்வான். |
|