பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்228

கதிர் எழும் உருவின் நின்ற கபீரியல் தன்னை நோக்கி,
"பொதிர் எழும் பவளத் தூண் மேல், பொன் மணித் தீபம் காளம்,
எதிர் எழும் அணி பொற் பாவை, ஏந்தியது உரைமோ" என்ன,
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றிச் சொல்வான் :

     கதிர் வீசும் உருவத்தோடு அருகே நின்ற கபிரியேலை நோக்கி,
"மிக உயர்ந்தெழுந்து நிற்கும் இப் பவளத் தூணின் மேல் நம் எதிரே
எழுந்து நிற்கும் அழகிய பொன்னாலாகிய பாவை, பொன்னாலாகிய
எக்காளமும் மணிகளாலாகிய விளக்கும் ஏந்தி நிற்பது பற்றிச் சொல்வாய்"
எனச் சூசை வேண்ட, சிதறிப் பரவும் கதிரொளி கொண்ட அவ்வானவன்
மதுவைப் போன்ற சொற்களைப் பொழிந்து பின்வருமாறு சொல்வான்;

     'பொன் மணித் தீபம் காளம்' என்பதனை, 'பொற்காளம் மணித்
தீபம்' என எதிர் நிரனிறையாக மாற்றிக் கூட்டுக. உரைமோ - உரை: 'மோ'
முன்னிலையசை.

                     6
வான்முழு திறைஞ்சு நாய்கன் வலிமையி னுருவ மாகத்
தேன்முழு துமிழ்பூந் தண்டார்ச் சேதையோன் மறைப கைத்த
வூன்முழு துடன்ற வேலா ரொருங்கழிந் தறவெம் போரில்
வேன்முழு திலகைக் கொண்ட விளக்குங்கா ளமுமி தென்றான்.
 
"வான் முழுது இறைஞ்சு நாய்கன் வலிமையின் உருவமாக,
தேன் முழுது உமிழ் பூந் தண் தார்ச் சேதையோன், மறை பகைத்த
ஊன் முழுது உடன்ற வேலார் ஒருங்கு அழிந்து அற, வெம் போரில்
வேல் முழுது இல, கைக் கொண்ட விளக்கும் காளமும் இது" என்றான்,