சேதையோனுக்கு
வானவன் தூது
- மா, கூவிளம்,
- விளம், - விளம், - மா
8 |
சொல்வ
ழங்கிய தகுதியாற் சுருதிநூல் வழங்கச்
செல்வ ழங்கிய துளியினுங் கொடையொடு சினந்த
வில்வ ழங்கிய விசயமா சோசுவன் வென்ற
வெல்வ ழங்கிய விருமுடி யரசரெண் ணரிதே. |
|
"சொல் வழங்கிய
தகுதியால், சுருதி நூல் வழங்க,
செல் வழங்கிய துளியினும் கொடையொடு, சினந்த
வில் வழங்கிய விசய மா சோசுவன் வென்ற,
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே. |
"முன் மிக்கயேல்
சொலலிக் காட்டிய முறைப்படி, வேத நூல்
வழங்கும் பொருட்டு, மேகம் வழங்கிய மழைத் துளியினும் மிகுதியான
கொடைச் சிறப்போடு, சினங் கொண்ட தன் வில் வழங்கிய வெற்றியாலும்
பெரியோனாகிய அச்சோசுவன் வென்ற, ஒளியை வழங்கிய சிறந்த முடியை
அணிந்த அரசரை எண்ணிக்கை செய்தல் அரிதாகும்.
9 |
சார னாப்பகன்
றாப்புவன் பெத்திலன் றாபிர்
தோரன் யாக்கனன் சுடர்முடி யிலேபுவ
னெரிக்கோன்
றேரி சானொடு தேனகன் காசர னுபரன்
னேரி மானவ னேருச லனெரிதன் யெரிமான். |
|
"சாரன், ஆப்பகன்,
தாப்புவன், பெத்திலன், தாபிர்,
தோரன், யாக்கனன், சுடர் முடி இலேபுவன்,
எரிக்கோன்,
தேரிசானொடு, தேனகன், காசரன், உபரன்,
ஏரிமான் அவன், ஏருசலன், எரிதன், யெரிமான், |
"சாரனும் ஆப்பசனும்
தாப்புவனும் பெத்திலனும் தாபிரும் தோரனும்
யாக்கனனும் சுடர் முடி அணிந்த இலேபுவனும் எரிக்கோனும் தேரிசானும்
அவனோடு தேனகனும் காசரனும் உபானும் ஏரிமான் என்னும் அவனும்
ஒரு சலனும் எரிதனும் யெரிமானும். |