10 |
ஏதி லேபிர
னிலக்கன னெகிலன்சி மோரன்
காத னாயரன் கலகலன் காதர னுதுலன்
மாத னாசுரன் மச்சத னக்கிசன் மகத்த
னோது பேருள முப்பதோ ரரசர்வென்
றொழித்தான். |
|
"ஏதில் ஏபிரன்,
இலக்கனன், எகிலன், சிமோரன்,
காதன், ஆயரன், கலகலன், காதரன், உதுலன்,
மாதன், ஆசுரன், மச்சதன், அக்கிசன், மகத்தன்
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று
ஒழித்தான். |
"அயலானாகிய
ஏபிரனும் இலக்கனனும் எகிலனும் சீமோரனும்
காதரனும் உதுலனும் மாதனும் ஆசரனும் மச்சதனும் அக்கிசனும்
மகத்தனும் என்று சொல்லும் பேர்களைக் கொண்டுள்ள முப்பத்தொரு
மன்னரையும் அச் சோசுவன் வென்று ஒழித்தான்.
இப்பாடல்,
'குளகம் பலபாட்டு ஒரு வினை கொள்ளும்' என்றவாறு
(தண்டி. 4) முந்திய பாடலோடு இணைந்து பொருள் முடிவது; 10-ம் பாடல்
என்னத்தக்கது. இதன் இறுதியில், 'இவை இரண்டும் ஒரு தொடர்' என்ற
குறிப்போடு, எண் இன்றி இணைக்கப்பட்டுள்ளது. பிறவிடத்தெல்லாம் இவை
போன்ற குளகப்பாட்டுகள் தனித்தனி எண்பெற்று நிற்கின்றன. எனினும்,
ஆசிரியரே இதனை எண்ணின்றி அமைத்தமையாலும், எண் பெறின் 3615
என்ற தொகை வேறுபாடுமாதலாலும் இவ்வடையாள எண் தரப்பட்டுள்ளது.
ஊர்ப் பெயரால் குறிக்கப்பெற்ற இவ்வரசர் பற்றிய செய்தி ப. ஏ., யோசுவா
ஆகமம், 12 : 9 - 24 நோக்கி அறிக.
யெரிமான்
- உயிரொலியோடு ஒரு புடை ஒப்புமை கொண்டுள்ள யி
யீ யெ யே என்பன மொழி முதலாக வருவதில்லை. எனவே, இப்பெயர்
தமிழ் மரபுப்படி 'எரிமான்' என நிற்கத்தக்கது. முன் ஒரு பெயர் 'ஏரிமான்'
எனவே நிற்றலின், பின் ஒரு பெயர் 'எரிமான்' என நிற்றற்கண்
இடர்ப்பாடும் இல்லை. எனினும் இரண்டும் ஒன்றே என்று மயங்குவரோ
என எண்ணி ஆசிரியர் யெரிமான் எனக் கூறியிருக்கலாம்.
|