பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்233

                 12
ஆளுங் கோனில வடற்படை வீரரு மிலவெந்
நாளுங் கோடிய கோற்பொறை சுமந்திறை பிறர்க்கு
நீளுங் கோடணை நிந்தையோ டழிவுடைக்குலத்தோர்
மீளுங் கோதறு மிடலினோ னுழுநனைத் தெரிந்தான்.
 
"ஆளும் கோன் இல, அடல் படை வீரரும் இல, எந்
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து, இறை பிறர்க்கு
நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடைக் குலத்தோர்
மீளும் கோது அறு மிடலினோன் உழுநளைத் தெரிந்தான்.

     "தம்மவனாய் ஆளும் அரசன் தமக்கு இல்லாமலும், வலிமை
வாய்ந்த படை வீரரும் இல்லாமலும், எந்நாளும் கோணிய கோலின்
சுமையைச் சுமந்து, பிற மன்னருக்கு வரியை நீட்டிக் கொடுக்கும்
கொடுமையாலும் நிந்தனையாலும் அழிவைக் கொண்டுள்ள யூத
குலத்தோரை மீட்கும் குற்றமற்ற வலிமை வாய்ந்தவனாகிய ஓர்
உழவனை ஆண்டவன் அதற்கென்று தெரிந்து கொண்டான்.

     'கோதறு மிடலினோன்' என்பதனை, "குறையின்றி அளவிறந்த
வல்லமையுடைய நாதன்' என்று பழையவுரை ஆண்டவனுக்கு
உரியதாக்கும். இவ்வாறு கொள்ளின் முந்திய பாடலில் 'சிறுமை புறம்
அகற்றினான்' என்பதனையே வேண்டாது விரித்தல் போல் அமையும்.
நீளும், மீளும் என்ற தன்வினைச் சொற்களை, நீட்டும், மீட்கும் எனப்
பிறவினைப் பொருள் பொருந்தக் கொள்க.

                    13
ஓதை யோங்கிய களத்துநெல் தெளித்தெடுத் துறைந்த
சேதை யோனிடைச் சென்றவான் றூதுமைப் பகைத்த
கோதை வேலினர்க் கொல்லவெம் போரமை கெனவிப்
பேதை யோபகை பெயர்த்தட வெனவயிர்ப் புற்றான்.
 
"ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த
சேதையோனிடைச் சென்ற வான் தூது, 'உமைப் பகைத்த
கோதை வேலினர்க் கொல்ல வெம் போர் அமைக' என 'இப்
பேதையோ பகை பெயர்த்து அட?' என அயிர்ப்பு உற்றான்.