17 |
மலையீன்
றமணிப் புயமா புலியீன்ற மார்பங்
கொலையீன் றகரங் கொடிதீன் றவழற் கொடுங்கண்
சிலையீன் றசரத் திடிகொண் டெரியீன்ற சீற்றத்
தலையீன் றபடைத் திரளோ டமலேக்கெ திர்த்தான். |
|
"மலை ஈன்ற மணிப்
புயம், மா புலி ஈன்ற மார்பம்,
கொலை ஈன்ற கரம், கொடிது ஈன்ற அழல் கொடுங் கண்
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து
அலை ஈன்ற படைத் திரளோடு அமலேக்கு எதிர்த்தான். |
"மலை போன்ற
அழகிய புயங்களும், பெரும் புலி போன்ற
மார்புகளும், கொலை விளைவித்த கைகளும், கொடுமை விளைவித்த
நெருப்புப் போன்ற கொடிய கண்களும் உடையவராய், வில்லினின்று
பிறந்த அம்பாகிய இடியைக் கொண்டும், நெருப்பினின்று பிறந்த
சீற்றத்தோடும் விளங்கிய கடல் போன்ற படைத் திரளோடு அமலேக்கு
என்ற மன்னனும் அவனோடு சேர்ந்து எதிர்த்தான்:
'இன்ற' என்பதற்கு,
'போன்ற' என்ற வலிந்த பொருள், இடம் அறிந்து
கொள்க. மார்புக்குப் புலி, அதன் ஊக்கம் கருதி உவமையாயிற்று:
18 |
வாளித்
திரளோங் கியதூ ணிவளர்ந்த தோளார்,
கூளித் திரளோ வடுகூற் றதுதோழர் கொல்லோ,
யாளித் திரளோ வவிர் கீழ்த் திசையாவு மாளு
மோளித் திரளோ ருமொருங் குதிரண்டு டன்றார். |
|
"வாளித் திரள்
ஓங்கிய தூணி வளர்ந்த தோளார்.
கூளித் திரளோ, அடு கூற்றது தோழர் கொல்லோ,
யாளித் திரளோ, அவிர் கீழ்த் திசை யாவும் ஆளும்
ஓளித் திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார். |
"அம்புத் திரள்
நிறைந்த புட்டில் பொருந்திய தோளை
உடையவர்களாய், பேய்களின் கூட்டமோ, கொல்லும் கூற்றுவனது
தோழர்களோ, யாளிகளின் கூட்டமோ என்னும் படியாக, ஒளி பொருந்திய
கீழ்த்திசை நாடுகள் யாவற்றையும் ஆளும், யானைத் திரளைச் சிறந்த
|