பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்237

படையாகக் கொண்டுள்ள மன்னரும் அவரோடு ஒருங்கு திரண்டு
போரிட்டனர்.

     தோழர் கொல்லோ - தோழரோ: 'கொல்' இடையே அசைநிலை.

                19
"தாமக் கவினிம் முடியா ரொடுசாய்ந்த சாலைத்
தூமக் கணெரித் தனதா னைகளோது ளித்த
காமக் கடமார் கரியோ பரியோக வின்கொள்
சேமக் கடிதேர்த் திரளோ வெவர்செப்ப வல்லார்.
 
"தாமக் கவின் இம் முடியாரொடு சாய்ந்த சாலைத்
தூமக் கண் எரித்து அன தானைகளோ, துளித்த
காமக் கடம் ஆர் கரியோ, பரியோ, கவின் கொள்
சேமக் கடி தேர்த் திரளோ எவர் செப்ப வல்லார்?

     "மாலையின் அழகு கொண்ட இம் முடி மன்னரோடு சாலை
வழியே சாய்ந்து வந்த புகைந்த கண்ணால் எரித்தாற் போன்ற காலாட்
படைகளையோ, சொரிந்த காம மதம் நிறைந்த யானைகளையோ,
குதிரைகளையோ, அழகு கொண்ட பாதுகாப்பான சிறந்த தேரின்
திரளையோ கணக்கிட்டுச் சொல்ல வல்லார் யார்?

     கரிபரிதேர்களைப் பின் விதந்து கூறவே, முன் தானை என்றது,
காலாட் படையை மட்டுமே சுட்டியதாயிற்று.

                20
கரியே குகவே கிலகாற் கடறானை காலாள்
வரியே குகவே கிலவாய்ந் தெழுதேர்த டந்தேர்க்
கிரியே குகவே கிலகேழ் கிளிவாசி பாயும்
பரியே குகவே கிலதோல் படர்வெள்ள மட்டோ.
 
"கரி ஏகுக, ஏகு இல கால் கடல் தானை; காலாள்
வரி ஏகுக, ஏகு இல வாய்ந்து எழு தேர்; தடம் தேர்க்
கிரி ஏகுக, ஏகு இல கேழ் கிளி வாசி; பாயும்
பரி ஏகுக, ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ?

     "யானைகள் செல்வதாயின், கடல் போன்ற காலாட் படை செல்ல
இடமில்லை; காலாட் படை வரிசை செல்வதாயின், அழகு வாய்ந்து நிமிர்ந்து
நின்ற தேர்கள் செல்ல இடமில்லை : பெரிய தேராகிய மலைகள்