பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்238

செல்வதாயின், செந்நிறம் வாய்ந்து, கிள்ளை என்னும் கிளியின் பெயரைத்
தன் பெயராகவும் கொண்டுள்ள குதிரைப் படை செல்ல இடமில்லை;
பாய்ந்து செல்லும் குதிரைகள் செல்வதாயின், யானைகள் செல்ல இடமில்லை.
இவ்வாறு சென்ற படை வெள்ளம் அளவுக்கு அடங்குவதோ?

     ஏகுக - ஏக : குகரம் இடையே சாரியை.

                 21
நாட்டங் கணிமைப் பினடிப் புநடத்து பாய்மாக்
கூட்டங் கதிகொண் டகுரத் துகள்கோவி சும்பின்
மோட்டங் கணொளிக் குமெனா மதமுற்றி யானை
யீட்டங் கடமா ரிவழங் கமுனேக விட்டார்.
 
"நாட்டம் கண் இமைப்பின், நடிப்பு நடத்து பாய் மாக்
கூட்டம் கதி கொண்ட குரத் துகள், கோ விசும்பின்
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா, மதம் முற்று யானை
ஈட்டம் கட மாரி வழங்க, முன் ஏக விட்டார்.

     "பார்வை கொண்ட கண் இமை கொட்டும் பொழுதிற்குள், குதிக்கும்
தொழிலை நடத்தும் குதிரைக் கூட்டம் வேகம்கொண்டு நடந்த
குளம்புகளினின்று எழுந்த தூசி. கோ என்றும் அழைக்கப்படும் வானத்தின்
உச்சியாகிய அழகிய இடமெல்லாம் மூடி மறைக்குமென்று கருதி, மதம்
முதிர்ந்த யானைக் கூட்டத்தை மத மாரி பொழியுமாறு குதிரைகளுக்கு
முன்னாகச் செல்லவிட்டனர்.

     முற்று + யானை - முற்றி யானை. யகரம் வரக் குற்றியலுகரம்
இகரமாயிற்று. மோடு - முகடு என்பதன் மரூஉ.

                   22
கார்வென் றனபோர் முரசார்ப் பொலிகாள கார்பெய்
நீர்வென் றனதோன் மதநீ ருகளென்னி லச்சொற்
சீர்வென் றனபாய் பரிமா திசையாங்க ணும்பற்
போர்வென் றனபொற் பொறைவென் றபுயத்து வீரர்.
 
"கார் வென்றன போர் முரசு ஆர்ப்பு ஒலி; காள கார் பெய்
நீர் தென்றன தோல் மத நீர்; உகள் என்னில், அச் சொல்
சீர் வென்றன பாய் பரி மா; திசை யாங்கணும் பல்
போர் வென்றன, பொன் பொறை வென்ற புயத்து வீரர்.