பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்239

     "போர் முரசின் முழக்க ஒலிகள் கார் மேகத்தின் முழக்கத்தை
வென்றன; யானைகளின் மத நீர்கள் காள மேகம் பொழியும் மழை
நீரையும் வென்றன; பாய் என்று சொன்னால், பாயும் குதிரைகள்
அச்சொல்லின் சீரையும் வென்றன; திசைகள் எங்கும் பல போர்களை
வென்று, பொன் மலையையும் வென்ற புயங்களை உடையவர் அப் போர்
வீரர். காளம் - கருமை. காள கார் - கருமையான மேகம்: 'கார்'
இவ்விடத்து 'மேகம்' என்ற பொருளில் நின்றது.


                23
கட்டா வியதீக் கனலிக் கடறானை செல்ல
விட்டா விவிழுங் கயில்வே லுடைசேதே யோன்றன்
னுட்டா வியதே வருளூக் கமொடோங்கி யோர்நான்
கெட்டா யிரஞ்சே வகரைக் கடிதீட்டி னானால்.
 
"கண் தாவிய தீக் கனல் இக் கடல் தானை செல்ல,
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடைச்
                                    சேதையோன், தன்
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி, ஓர் நான்கு
எட்டாயிரம் சேவகரைக் கடிது ஈட்டினான் ஆல்.

     "தம் கண்ணினின்று தாவிய நெருப்புக் கனலைக் கொண்டுள்ள இந்தக்
கடல் போன்ற பகைவர் படைகள் அணிவகுத்துச் செல்லக் கண்டு, பகைவர்
உடலைவிட்டு உயிரை விழுங்கும் கூர்மையான வேலைத் தாங்கிய
சேதையோன், தன் உள்ளத்தில் தாவிப் பரந்த தெய்வ அருள் தரும்
ஊக்கத்தால் எழுச்சிக் கொண்டு, ஒரு முப்பத்தீராயிரம் வீரரை விரைவாகத்
திரட்டினான்

     4 * 8000 = 32000. ஆல் - அசை நிலை.

                   சேதையோன் படையணி

     - விளம், - விளம், - மா, தேமா

               24
கவிமதத் துயர்வலிக் கடவுள் கண்டுளி
குவிமதத் திபமுதற் கொலைப்ப டைக்கடல்
செவிமதத் துருவுறச் சிதைத்து நான்வெலச்
சவிமதத் தெழுந்தவித் தானை வேண்டுமோ.