பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்240

"கவி மதத்து உயர் வலிக் கடவுள், கண்டு உளி,
குவி மதத்து இபம் முதல் கொலைப் படைக் கடல்,
செவி மதத்து உரு உறச் சிதைத்து நான் வெல,
சவி மதத்து எழுந்த இத் தானை வேண்டுமோ?

     "கவிஞர் கோட்பாடுகளுக்கும் எட்டாமல் உயர்ந்த வல்லமை கொண்ட
கடவுள், சேதையோன் திரட்டிய படையைக் கண்ட போது, (பின் வருமாறு
சொல்வான்): 'திரண்ட மதங்கொண்ட யானை முதலிய கொல்லும் தன்மை
வாய்ந்த பகைவர் படையாகிய கடலை, கேட்டோர் செவியிடத்து அச்சங்
கொள்ளுமாறு சிதைத்து நான் வெல்வதற்கு, அழகிய தோற்றத்தோடு எழுந்து
நின்ற இப்படை தானும் வேண்டுமோ?

              25
சுட்டழற் சமர்க்குளந் துவள வஞ்சுவார்
விட்டழற் சினமுதிர் வீரர் நிற்பவென்
றிட்டழற் கதத்தெழுந் தீரை யாயிரங்
கட்டழற் றிறலினோர் கனிநின் றாரரோ.
 
"'சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார்
விட்டு, அழல் சினம் முதிர் வீரர் நிற்ப' என்று
இட்டு, அழல் கதத்து எழுந்து, ஈர் ஐயாயிரம்
கண் தழல் திறலினோர், கனி நின்றார் அரோ.

     "'சுடுந் தன்மை வாய்ந்த நெருப்புப் போன்ற போருக்கு உள்ளம்
துவண்டு அஞ்சுவோரை விலக்கிவிட்டு, நெருப்புப் போன்ற சினம் முதிர்ந்த
வீரர் மட்டுமே நிற்பாராக' என்று கட்டளை இடவும், கண்ணினின்று
நெருப்பைக் கக்கும் திறம் வாய்ந்தோர் பதினாயிரம் பேர், நெருப்புப்
போன்ற சினத்தோடு எழுந்து கனிவோடு நின்றனர்.

     'அரோ' அசைநிலை. 2 * 5000 = 10000

               26
வாகைமிக் கொளியெனக் காக மற்றுநாள்
வேகமிக் குறிப்பகல் வேலை யாற்றிடைத்
தாகமிக் கக்கனின் றன்மை நீருண்பார்
போகமிக் கள்ளியுண் பொருநர்ச்
                       சேர்க்கென்றான்.