"'வாகை மிக்கு,
ஒளி எனக்கு ஆக, மற்று நாள்
வேகம் மிக்கு உறி, பகல் வேலை, ஆற்றிடை'
தாகம் மிக்கு, அக்கனின் தன்மை நீர் உண்பார்
போக, மிக்கு அள்ளி உண் பொருநர்ச் சேர்க்க'
என்றான். |
"மீண்டும் கடவுள்,
'வெற்றி மிகுந்து, அதனால் ஆகும் புகழ்
எனக்கே உரியதாகும்படி, மறு நாள் நடை வேகம் மிகுதியாகி, பகல்
வேளையில் தாகம் மிகுதியாகி, நாயின் தன்மையாய் ஆற்றில் நீரை
நாவினால் நக்கி உண்பாரைப் போக விட்டு, மிகுதியாக நீரைக் கையால்
அள்ளி உண்ணும் வீரரை மட்டுமே திரட்டிச் சேர்ப்பாயாக என்றான்.
சேர்க்க +
என்றான் - 'சேர்க்க வென்றான்' என்பது, சேர்க்கென்றான்'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
27 |
நீர்முகந்
துண்டமுந் நூறு நின்றபின்
பார்முகந் தொழும்பிரான் பார்த்து நும்பகைப்
போர்முகந் தகுஞ்செய மினிப்பொ லிந்தவென்
சீர்முகந் தகுந்திறல் சிறப்பிற் றாமென்றான். |
|
"நீர் முகந்து
உண்ட முந்நூறு நின்ற பின்,
பார் முகம் தொழும் பிரான் பார்த்து, 'நும் பகைப்
போர் முகம் தகும் செயம், இனி, பொலிந்த என்
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம்' என்றான். |
"நீரைக் கையால்
முகந்து உண்ட மூந்நூறு பேர் மட்டும் தனியாக
அணி வகுத்து நின்ற பின், உலகமெல்லாம் தொழும் ஆண்டவன்
சேதையோனை நோக்கி, 'இனி, உம் பகைவரோடு செய்யும் போர்
முனையில் தகுதியாக நீர் பெறும் வெற்றி, பொலிவுள்ள என் சிறந்த இயல்புக்கு ஏற்ற
சிறப்பை உடையதாக அமையும்' என்றான்.
28 |
வவ்வொரு வேலில மங்கு னாப்பணிற்
கவ்வொரு காளமட் கலம்வி ளக்கிவை
யொவ்வொரு வற்கிடு கெனவு ரைத்தனன்
செவ்வொரு திருவிளை யாட்டுத் தேவனே. |
|