பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்243

     - மா, கூவிளங்காய், - மா, கூவிளங்காய், - மா, கூவிளங்காய்,
- விளம்


                     30
எதிரெ ழுந்தபகை யவரு றைந்தவிடை யிவரெ ழுந்தரவ
                                      மிலவுறிக்
கதிரெ ழுந்தசுட ரொளிம றைந்துமிசை கவிழு கின்றபல
                                      கலமொடு
பொதிரெ ழுந்தவிரு டலைப ரந்துவிரி புவிம றைந்தநிசி
                                      நடுவலி
முதிரெ ழுந்தவிறை யவன ரந்துவிதி முறைப ணிந்தசமர்
                                      முயல்குவார்.
 
"எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை, இவர் எழுந்து, அரவம்                                           இல உறி,
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து, மிசை கவழுகின்ற பல கலமொடு,
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு, வலி
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர்
                                              முயல்குவார்.

     "கதிர் விரித்து எழுந்த கதிரவனின் ஒளி மறைந்து, திரண்டு எழுந்த
இருள் இடமெல்லாம் பரந்து விரிந்த மண்ணுலகம் அதனில் மறைந்த நடு
இரவில் இவ்வீரர் எழுந்து, விளக்கின்மீது கவிழ்ந்து மறைத்த பல
பானைகளோடு, எதிரே போருக்கு எழுந்த பகைவர் தங்கியிருந்த
இடத்திற்கு அரவமில்லாது சென்று, வல்லமை முற்றி எழுந்த ஆண்டவன்
கூறிய விதி முறைக்குப் பணிந்து அமைந்த போரில் ஈடுபடுவர்.

     'பல கலம்' என்றாரேனும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கலம்
எனக் கொள்க.

                      32
வீறு வீரனியை தாழி நூறியிடு வேலை வேகமுட னூறொடு
நூறு நூறுகல நூறி நூறுமொடு நூறு நூறுசுடர் தோன்றநூ
றேறு நூறுமொடு நூறு தாரையொலி யீறி லாதுமெழ
                                    வானின்மேற்
சீறு மேறுபல கோடி கோடியதிர் சீரி னாலுதிசை கூசவே.