"வீறு வீரன்
இயை தாழி நூறி இடு வேல், வேகமுடன் நூறொடு
நூறு நூறு கலம் நூறி, நூறுமொடு நூறு நூறு சுடர் தோன்ற, நூறு
ஏறு நூறுமொடு நூறு தாரைஒலி ஈறு இலாதும் எழ, வானின்மேல்
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே, |
"பெருமை வாய்ந்த
வீரனாகிய சேதையோன் தன் கையில் பொருந்திய
பானையை அடுத்தவன் பானையோடு மோதி உடைத்துப் போட்ட அதே
நேரத்தில், மற்ற வீரரும் அவ்வாறே வேகத்தோடு நூறோடு நூறும் நூறுமாக
முந்நூறு பானைகளை அவ்வாறே மோதி உடைக்க, நூறோடு நூறும்
நூறுமாக முந்நூறு விளக்குகள் வெளிப்பட்டுத் தோன்ற, நூறோடு கூடிய
நூறோடு நூறாக முந்நூறு எக்காள ஒலி முடிவில்லாது முழங்கி எழவே,
வானத்தில் சீறும் இடி பல கோடி கோடியாக அதிரும் தன்மை போல் நாலு
திசைகளும் கூசவே,
இது குளகப் பாட்டு;
அடுத்த பாடலில் ஏறினார் என்பதனோடு
பொருள் நிறைவுபெறும். இதன் எண் 31 என்று இருக்கவேண்டியது, 32
என அமைந்தது, முன் 9 என இரு பாடல்கள் ஒரு பாடலாக எண்ணப்பட்ட
பிழையைத் திருத்தி, அதற்கேற்ப முந்திய எண்களை 9 முதல் திருத்திக்
கொணராமையால் நேர்ந்துள்ளது.
33 |
கனவு டைந்தமரு
ளிரவ டர்ந்தவிருள் கலமு டைந்தவொலி
சுடரிடும்
வினவு டைந்தவொளி மலிம லிந்தவொலி வெருவி யன்றவிவை
மருளிவெம்
மனமு டைந்தபதை பகையு டன்றபடை வயமு ழங்கிவளர்
முகிலிடி
யினமு டைந்தபடி கரியி னங்களுயர் பரியி னங்களுய ரேறினார். |
|