பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்245

"கனவு உடைந்த மருள், இரவு அடர்ந்த இருள், கலம் உடைந்த
                                        ஒலி, சுடர் இடும்
வினவு உடைந்த ஒளி, மலி மலிந்த ஒலி, வெரு இயன்ற இவை
                                        மருளி, வெம்
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி, வளர்
                                        முகில் இடி
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர்
                                        ஏறினார்.

     "பகைவர் கனவு கலைந்து எழுந்த தூக்க மயக்கமும், இரவின்
அடர்ந்த இருளும், பானைகள் உடைந்த ஒலியும், வினவி அறிய இயலாது
சுடர் விட்டு எரியும் விளக்குகளும், மிகுதியாகப் பெருகிய எக்காள
ஒலியுமாக அச்சம் தரும் இவற்றால் மதி மயங்கி, உறுதியான தம் மனமும்
உடைந்த பதைப்போடு பகையால் மாறுபட்டு நின்ற அப்படை வீறிட்டு
முழங்கி, கருமை வளரும் மேகத்தில் தோன்றும் இடிக்கூட்டம் உடைந்து
சிதறியது போல, அவ்வீரர்கள் தம் யானைக் கூட்டங்களின் மேலும்
குதிரைக் கூட்டங்களின் மேலும் ஏறிக்கொண்டனர்.

                     34
மருள்மு திர்ந்தவெரு வொடுவ ளைந்தவினை வடுவ
                              ளர்ந்தபொழு ததுவெனத்
தெருள்மு திர்ந்தமறை யவர்க லந்ததெனச் செருமு திர்ந்தபகை
                              யவர்தமை
யிருள்மு திர்ந்தவிர வெரிமு திர்ந்தசின மொடுது மிந்துகொலை
                              யிடவிட
வருள்மு திர்ந்தவிறை யவன னந்தவய வடல்வி ளங்கவரி
                              தமர்செய்தார்.
 
"மருள் முதிர்ந்த வெருவொடு, வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது
                                             அது என,
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என, செரு முதிர்ந்த பகையவர்,
                                         தமை,
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து அன சினமொடு, துமிந்து கொலை
                                             இட இட,
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க, அரிது அமர்
                                             செய்தார்.