பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்247

                    36
பறைமு ழங்கமத கரிமு ழங்கவய பரிமு ழங்கவிடு பகழிக
ளுறைமு ழங்கவவ ரவர்மு ழங்கவிக லுழவ ரென்றுதவ ரொழிதர
நிறைநு கர்ந்தமது வெறிமு திர்ந்தநெறி யிலரு டன்றவமர்
                                        நிகரெனப்
பிறைநு கர்ந்தலிரு ளொடும யங்கியவர் பெரிது மிழ்ந்தவுயி
                                        ரளவதோ.
 
"பறை ழுழங்க, மத கரி முழங்க, வய பரி முழங்க, விடு பகழிகள்
உறை முழங்க, அவரவர் முழங்க, இகல் உழவர் என்று தமர் ஒழி தர,
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என,
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர்                                         அளவதோ?

     "பறைகள் முழங்கவும், மதங் கொண்ட யானைகள் முழங்கவும்,
வலிமை வாய்ந்த குதிரைகள் முழங்கவும், விடும் அம்புகளின் மழை
முழங்கவுமாக அவரவர் முழங்கிக் கொண்டு, பகைப் படை வீரரென்று
தவறாகக் கருதிக் கொண்டு தம்மவரே மடியுமாறு, நிறைய உண்ட மதுவால்
வெறி முற்றிய நெறியற்றவர் சினந்து செய்த போருக்கு நிகராக, பிறையை
விழுங்கி மறைத்த இருளோடு அறிவு மயங்கி அப்பகைவர் மிகுதியாகச்
சிந்திய உயிர் அளவுக்கு அடங்குவதோ?

     "அந்நாளிலே வளர்பிறை ஆகையில், போர் தொடங்கின நடுச்
சாமத்துக்கு முன்னே அப்பிறை அத்தமித்ததனால், 'பிறை நுகர்ந்த இருள்'
என்றார்" என்பது பழையவுரையின் அடிக்குறிப்பு. 'வயப்பரி' என்பது 'வய
பரி' என நின்றது, 'இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும்"
என்றபடி (நன். 239), உரிச்சொற்றொடர் இயல் பாயிற்றெனக் கொள்க.
உழவர் - போருழவர் : படை வீரர்.

                     37
வண்டு பட்டனவி பங்கள் பட்டனவ யங்கள் பட்டனவ
                                     ளர்ந்ததேர்
துண்டு பட்டனக ரங்கள் பட்டனது மிந்து பட்டனப
                                     தங்கடிண்
டண்டு பட்டனசி ரங்கள் பட்டனச டங்கள் பட்டனத
                                     டிந்தவாள்
கொண்டு பட்டனகு ணுங்கர் பட்டனகு ணுங்கு பட்டிலந
                                     யங்களே.