|
"வண்டு பட்டன,
இபங்கள் பட்டன; அயங்கள் பட்டன. வளர்ந்த தேர்
துண்டு பட்டன, கரங்கள் பட்டன, துமிந்து பட்டன பதங்கள், திண்
தண்டு பட்டன, சிரங்கள் பட்டன, சடங்கள் பட்டன, தடிந்த வாள்
கொண்டு பட்டன, குணுங்கர், பட்டன, குணுங்கு பட்டில நயங்களே. |
"தமக்குள் ஏவிக்கொண்ட
அம்பு பட்டு யானைகள் மடிந்தன.
குதிரைகளும் மடிந்தன. உறுதியான தண்டாயுதங்கள் தம்மீது படவே,
உயர்ந்த தேர்கள் துண்டுபட்டன; கைகள் அறுந்து விழுந்தன. கால்கள்
வெட்டுண்டு விழுந்தன. வெட்டிய வாளால் மடிந்த அச்சண்டாளர், தலைகள்
அறுந்து விழுந்தும், உடல்கள் சிதைந்து விழுந்தும் பட்ட துன்பங்களால்,
பேய்கள் இன்பம் கொள்ளவில்லை.
மடிந்த வீரர்களைக்
கண்டு தமக்கு உணவெனப் பேய்கள்
மகிழ்வதாகக் கூறுதல் இலக்கிய மரபு. இங்கு மடிந்தோர் தமக்குச்
சார்பாளராதலின், அவை இன்பம் கொள்ளவில்லை.
| 38 |
உழையி னங்கடமை
யடவெ திர்ந்தவய வுகிரு டன்றவரி
யெனவுமுட்
கழையு லர்ந்தவன மிடைநு ழைந்துநுகர் கனலு டன்றகத
மெனவுமென்
மழைநி கர்ந்தகணை, கனைம லிந்தவசி, வசிமு னிந்தவயி
னுழையிடும்
புழைய கன்றவழி வழிசி வந்தபுனல் புறம றைந்தமரு ளிரணமே. |
| |
"உழை இனங்கள்
தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி
எனவும், முள்
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம்
எனவும், எல்
மழை நிகர்ந்த கணை, கனை மலிந்த வசி, வசி முனிந்த அயில்
நுழை இடும்
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள்
இரணமே.
|
|