பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்250

                    40
கூன்பிறை யெயிற்று மாபோற் கொற்றவ ரிருவர் தம்மைத்
தேன்பிற ழலங்கள் மார்பிற் சேதையோ னென்ன வெண்ணி
வான்பிறை யுறழ்வில் வாங்கி மறங்கொடு மயங்கித் தம்மே
லூன்பிறழ் பகழி மாரி யுதிர்த்தரி தமரி னேர்ந்தார்.
 
"கூன் பிறை எயிற்று மா போல், கொற்றவர் இருவர், தம்மைத்
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி,
வான் பிறை உறழ் வில் வாங்கி, மறம் கொடு மயங்கி, தம் மேல்
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து, அரிது அமரின் நேர்ந்தார்.

     "வளைந்த பிறை போன்ற கொம்புள்ள யானை போல், மதியான்
அமலேக்கு என்னும் மன்னர் இருவரும், தேன் விளங்கும் மாலை அணிந்த
மார்பையுடைய சேதையோன் என்று ஒவ்வொருவனும் மற்றவனை எண்ணி,
வீரம் கொண்டு மயங்கி, வானத்துப் பிறை போன்ற வில்லை வளைத்து.
தம்முள் ஒருவன் மீது ஒருவன் ஊன் விளங்கும் அம்புமாரி பொழிந்து,
அரிய தன்மையாய்ப் போரில் ஈடுபட்டனர்.

     'மா' என்ற விலங்கினப் பொதுப் பெயர், 'கூன் பிறை எயிற்று' என்ற
அடைமொழியால், யானைக்கு உரியதாயிற்று.

                     41
கடுவுண்ட வெண்ணில் பல்லங் கதமுண்ட வமலேக் கெய்தான்
கடுவுண்ட வெண்ணில் பல்லங் கான்றவை மதியான் காத்தான்
வடுவுண்ட பிறையின் வாளி மறமுண்ட மதியான் கோத்தான்
வடுவுண்ட பிறையின் வாளி வகுத்தவை யமலேக் கீர்ந்தான்.
 
"கடு உண்ட எண் இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்;
கடு உண்ட எண் இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான்,
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான்;
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான்.