பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்251

     "சினம் கொண்ட அமலேக்கு நஞ்சு தோய்ந்த எண்ணற்ற
அம்புகளை மதியான் மீது எய்தான்; மதியானோ, நஞ்சு தோய்ந்த
எண்ணற்ற அம்புகளைத் தானும் பொழிந்து அவற்றைத் தடுத்தான். வீரம்
கொண்ட மதியான் வடுப்பட்டுத் தேய்ந்த பிறை வடிவான அம்புகளை
அமலேக்கு மீது தொடுத்தான்; அமலேக்கோ, வடுப்பட்டுத் தேய்ந்த
பிறைவடிவான அம்புகளைத் தானும் ஏவி அவற்றை அறுத்தொழித்தான்.


                    42
பொறிப்படப் பகழி மாரி போக்கினா னமலேக் கற்றைப்
பொறிப்படப் பகழி மாரி புகுத்திய மதியான் றீர்த்தான்
கறிப்படப் பகுவாய்ப் புங்கங் கதத்துட னிவனு மேவக்
கறிப்படப் பகுவாய்ப் புங்கங் கடைத்தவை யவனுங்
                                      காத்தான்.
 
"பொறிப் படப் பகழி மாரி போக்கினான் அமலேக்கு; அற்றை,
பொறிப் படப் பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான்.
கறிப் படப் பகு வாய்ப் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ,
கறிப் படப் பகு வாய்ப் புங்கம் கடைத்து அவை அவனும்
                                          காத்தான்.

     "அமலேக்கு தீப்பொறி பறக்க அம்பு மாரியை மதியான் மீது
செலுத்தினான்; அது போன்று, தீப்பொறி பறக்க அம்பு மாரியை ஏவிய
மதியான் அவற்றை விலக்கினான். ஊனைப் பிளக்கத் தக்க அகன்ற
வாயுள்ள அம்புகளைச் சினத்துடன் இவனும் ஏவ, அவனும், ஊனைப்
பிளக்கத்தக்க அகன்ற வாயுள்ள அம்புகளைத் தானும் ஏவி அவற்றைத்
தடுத்தான்.

     கடைத்தல் - 'கடாவுதல்' என்ற சொல்லின் மாற்று வடிவம்.

                   43
நச்சர வொக்கும் வாளி நடுங்குற மதியான் றூவ
நச்சர வொக்கும் வாளி நவி்ழ்தவை விலக்கி மீட்டு
முச்சிர மொய்க்கும் வாளி முடுக்கினா னமலேக் கற்றை
முச்சிர மொய்க்கும் வாளி முனிந்துவிட் டறுத்தான்
                                    முன்பான்.