பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்252

"நஞ்சு அரவு ஒக்கும் வாளி நடுங்குற மதியான் தூவ,
நஞ்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி, மீட்டு
முச் சிரம் மொய்க்கும் வாளி முடுக்கினான், அமலேக்கு, அற்றை,
முச்சிரம் மொய்க்கும் வாளி முனிந்து விட்டு அறுத்தான் முன்பான்.

     "எதிரி நடுங்குமாறு, நஞ்சுள்ள பாம்பை உருவாலும் செயலாலும்
ஒக்கும் அம்புகளை மதியான் பொழிய, அமலேக்கு, நஞ்சுள்ள பாம்பை
ஒக்கும் அம்பைப் பொழிந்து அவற்றை விலக்கி, மீண்டும், மூன்று
தலைகள் கொண்டுள்ள அம்பை ஏவினான். முன்னவன், அது போன்று,
மூன்று தலைகள் கொண்டுள்ள அம்பைச் சினத்தோடு செலுத்தி அவற்றை
அறுத்தான்.

     நஞ்சு + அரவு - நச்சு + அரவு = நச்சரவு.

                  44
ஓரிரு முகிலி னொப்ப ஒலித்திரு தடந்தே ரோடிப்
பேரிரு வசனி யொத்தார் பெருஞ்சினத் துடற்றி யார்ப்ப
நேரிரு வயவிற் கோலி நேரலாற் றமிறாழ் வின்றி
யீரிரு திசைகள் கூச இயன்றபோ ருரைக்கும் பாலோ.
 
"ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடந் தேர் ஓடி,
பேர் இரு அசனி ஒத்தார், பெருஞ் சினத்து உடற்றி ஆர்ப்ப,
நேர் இரு வய வில் கோலி, நேர் அலால், தமில் தாழ்வு இன்றி
ஈர் இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும் பாலோ?

     "பெரிய இரண்டு இடிகளை ஒத்த அவ்விருவரும், இரண்டு
மேகங்களுக்கு ஒப்பாக ஒலித்து இரண்டு பெரிய தேர்களை ஓட்டிச்
சென்று, பெருஞ் சினத்தோடு போரிட்டு முழங்கி, நேரே நின்று இரண்டு
வலிமை வாய்ந்த வில்லுகளை வளைத்து, ஒருவனுக்கொருவன் நிகர்
என்பது அல்லாமல், தமக்குள் தாழ்விற்கு இடமின்றி, நான்கு திசைகளும்
கூசுமாறு நடத்திய போர் எடுத்துரைக்கும் தன்மையதோ?

                     45
பைம்மணித் தேரின் சித்தி பகழியா லமலேக் கீர்ந்தான்
மைம்மணித் தேரின் சித்தி வாளியான் மதியா னற்றான்
செய்ம்மணித் தேரின் சாரன் சிரங்கவிழ்த் திவனுங்
                                         கொய்தா
னைம்மணித் தேரின் சார னகலமற் றவனு மாய்த்தான்.