"பை மணித் தேரின்
சித்தி பகழியால் அமலேக்கு ஈர்ந்தான்.
மை மணித் தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான்,
செய் மணிந் தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான்.
ஐ மணித் தேரின் சாரன் அகலம் அற்று அவனும் மாய்த்தான். |
''அமலேக்கு
மதியானின் பசுமையான மரகத மணி பதித்த தேரின்
கொடியை அம்பினால் அறுத்தெறிந்தான். மதியான் அமலேக்கின் நீல மணி
பதித்த தேரின் கொடியை அம்பினால் அறுத்தெறிந்தான். பின் இவனே
அவனது அழகு செய்யப் பெற்ற மணிகள் பதித்த தேரின் சாரதி தலையைக்
கொய்து வீழ்த்தினான். அவனும் இவனது அழகிய மணித் தேரின் சாரதி
மார்பைப் பிளந்து மடிவித்தான்.
'சிரம் கவிழ்த்துக்
கொய்தான்' என்பதனை, 'சிரம் கொய்து
கவிழ்த்தினான்' என மாற்றிப் பொருள் கொள்க: பைம்மணி - பசுமை +
மணி - பசு + மணி - பை + மணி = பைம்மணி.
46 |
சாரர்சார்
பிழந்த வாசி தழற்படத் தவறித் தாவித்
தேரர்தே ருளத்திற் சீறிச் சீயமு முருமுந் தீயு
நேரர்நே ரலரி லாது நெடுமரு ளறாதும் வீரப்
போரர்போ ரியற்று மாறு புகன்றிட லரிய வாறே. |
|
"சாரர் சார்பு
இழந்த வாசி, தழல் படத் தவறித் தாவி,
தேரர் தேர் உளத்தின் சீறி, சீயமும் உருமும் தீயும்
நேரர், நேரலர் இலாதும், நெடு மருள் அறாதும், வீரப்
போரர், போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே. |
"மேற் கூறியவாறு,
சாரதியரின் சார்பு இழந்த குதிரைகள்,
நெருப்பினுள் அகப்பட்டாற் போல் நிலை தவறிக் குதிக்கவும், தேரிலிருந்த
அரசர் இருவரும் வெற்றியே கருதிய மனத்தோடு சீறி, அரிமாவும் இடியும்
தீயும் போன்றவராய், பகைவர் இல்லாமலும், தாம் பகைவர் என்ற மயக்கம்
அறாமலும், வீரப் போர் புரிபவர் என்ற நினைப்போடு, போர் புரியும்
தன்மையை எடுத்துக் கூறுதல் அரிய செயலாகும்.
|