பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்254

                     47
எரிக்கொன்றுஞ் சினக்கண் சேப்ப விரைத்தவில் குனிய வாங்கிக்
கரிக்கொன்றுங் கதத்த வீரர் கடுத்திளம் பிறையின் வாளி
பரிக்கொன்று மொன்ற வேவிப் பகப்படு பரிகள் வீழ்க
வரிக்கொன்றுஞ் சீற்றத் தொண்டே ரசலமே லிருவர் காய்ந்தார்.
 
"எரிக்கு ஒன்றும் சினக் கண் சேப்ப, இரைத்த வில் குனிய வாங்கி,
கரிக்கு ஒன்றும் கதத்த வீரர் கடுத்து, இளம் பிறையின் வாளி
பரிக்கு ஒன்றும் ஒன்ற ஏவி, பகப் படு பரிகள் வீழ்க
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர் அசல மேல் இருவர் காய்ந்தார்.

     "நெருப்புக்கு ஒப்பாகும் சினங் கொண்ட தம் கண்கள் சிவக்குமாறு,
இறைந்த தம் வில்லுகளைக் குனிய வளைத்து, யானைக்கு ஒப்பாகும்
சீற்றங்கொண்ட அவ்வீர மன்னர் இருவரும் கடுகடுத்து, ஒவ்வொரு
குதிரைக்கும் ஒவ்வொன்றாக இளம் பிறை வடிவமான அம்பைத்
தைக்கும்படி ஏவி, அவற்றால் பிளக்கப் பட்டு மடிந்த குதிரைகள் தரையில்
சாயவும், அவ்விருவரும் அரிமாவுக்கு ஒப்பாகும் சீற்றத்தோடு ஒளி
பொருந்திய தேராகிய மலைமேல் கொதிப்புடன் நின்றனர்.

                     48
நிலையுண்ட தேரிற் செந்தீ நிலையுண்ட மதியான் சீறிச்
சிலையுண்ட பகழி போக்கித் திறத்துண்ட கவச மீர்ந்தான்
மலையுண்ட கவச மீர்ந்தான் மறமுண்ட விழித்தீ யோடு
கொலையுண்ட கணையொன் றேவுங் கூற்றுண்ட வமலேக்                                        கென்பான்.
 
"நிலை உண்ட தேரில் செந் தீ நிலை உண்ட மதியான் சீறி,
சிலை உண்ட பகழி போக்கி, திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான்.
மலை உண்ட கவசம் ஈர்ந்தான், மறம் உண்ட விழித் தீயோடு
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு                                         என்பான்.

     "நிலைகொண்ட தேரில் செந்நெருப்புப் போல் நிலைகொண்ட மதியான்
சீறி, தன் வில்லிற் பொருந்திய அம்பைச் செலுத்தி, அமலேக்கு திறத்தோடு
அணிந்து கொண்டிருந்த கவசத்தை அறுத்தெறிந்தான். வீரம் கொண்ட