களரிப்
பெயரும் பாவை வரலாறும்
- மா,
- - காய், - மா, - மா, - - காய்
52 |
மண்மா மகள்
போர்த்த விருளின் போர்வை வாங்கிடத்தன்
னொண்மா வொளிக்கரத்தை நீட்டி வெய்யோ னுதித்தனகாற்
கண்மா யிருள்கொண்ட மயக்கந் தீர்ந்த கடும்பகைவர்
விண்மா விறையோன்றன் வலிமை கண்டு வெருவுற்றார். |
|
"மண் மா மகள்
போர்த்த இருளின் போர்வை வாங்கிட, தன்
ஒண் மா ஒளிக் கரத்தை நீட்டி வெய்யோன் உதித்தன கால்,
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர்,
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெரு உற்றார். |
"நிலமென்னும்
பெருமகள் தன்மீது போர்த்திக் கொண்டிருந்த
இருளென்னும் போர்வையை விலக்கிக்கொண்டு, கதிரவன் தன் ஒளி
மிக்க கதிர்களாகிய கையை நீட்டி உதித்த வேளையில், தம் கண்கள்
இருளில் கொண்ட மயக்கம் தீர்ந்து தெளிந்த கடும் பகைவர்,
விண்ணுலகத்துப் பெருங் கடவுளின் வலிமையைக் கண்டு அச்சம்
கொண்டனர்.
53 |
தீவை வேலாடா
வெருவி யேங்கித் திறங்குழைந்தம்
மூவை யாயிரரு மோட யூதர் முடுகியவர்
மீவை வாளிதொடுத் தொருங்கு மாய்த்தார் வியந்தெவரு
நாவை யையிரட்டி யடையா வண்ண நடுக்குறவே. |
|
"தீ வை வேல்
ஆடா வெருவி ஏங்கித் திறம் குழைந்து அம்
மூ ஐயாயிரரும் ஓட, யூதர் முடுகி, அவர்
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார், வியந்து எவரும்
நா ஐ ஐ இரட்டி அடையா வண்ணம் நடுக்கு உறவே. |
"அப் பதினையாயிரம்
பேரும் தம் கையில் தாங்கிய கொடிய கூரிய
வேலை அசைக்கவும் இயலாமல் அஞ்சி ஏங்கித் திறம் குழைந்து ஓடத்
தொடங்கவே, யூதர் அவரை விரைந்து தொடர்ந்து, ஐம்பது நாவுகள்
கொண்டும் அமையச் சொல்ல இயலாதவாறு நடுக்கங் கொள்ள, அவர்
மீது கூரிய அம்புகளை ஏவி ஒருங்கு மாய்த்தனர்.
மூ
ஐயாயிரம்: 3 * 5000 = 15000. ஐ ஐ இரட்டி: 5 * 5 * 2 = 50.
|