பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்259

     பந்தர் - 'பந்தல்' என்பதன் கடைப் போலி.

                  56
மாற்றா ருடற்படத்தி லவர்தங் கையால் வடியுதிரந்
தேற்றா ரறிந்தேற்ற வரிதுன் னாண்மை யெழுதியபின்
றேற்றா ரெனவருந்தித் துன்பத் தின்றுன் றிருவுடலத்
தாற்றா வன்பினிலை வரைந்தா யோவென் றடிபணிந்தான்.
 
"மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து,
ஏற்றார் அறிந்து ஏற்ற, அரிது உன் ஆண்மை எழுதிய பின்,
தேற்றார் என வருந்தி, துன்பத்து, இன்று, உன் திரு உடலத்து
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ?" என்று, அடி பணிந்தான்.

     சூசை திருமகனை நோக்கி, "உன்னைப் போற்றாதவர் அறிந்து
போற்றுமாறு, முன்னெல்லாம் நீ பகைவரின் உடலாகிய திரைச் சீலையில்
அவர் தம் கையால் வடித்துக் கொள்ளும் உதிரத்தைக் கொண்டே
அரியமுறையில் உன் ஆண்மையை எழுதிக்காட்டினாய்; பின்
இக்காலத்திலோ, அதனால் அவர் தெளிவு பெறாரென்று வருந்தி,
துன்பத்தை நீயே ஏற்றுக்கொண்டு தணிக்கமாட்டாத உன் அன்பின்
நிலையை உன் திரு உடலிலேயே வரைந்து காட்ட முற்பட்டாயோ?"
என்று கூறி, அடி பணிந்தான்.

                   57
தணியா வலித்திறத்தை யுலகங் கண்டு தாடுதிப்ப
மணியா றவழ்சுடர் செய் தூண்மன் னார வைத்துயர்த்தார்
கணியா நயன்செய்யுன் னார்வங் காட்டுங் கம்பமென
வணியார் திருமேனி யணிந்தா யோவென் றடிபணிந்தான்.