பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்263

     ஒளியால் பொதியப்பட்ட பவளத் தூண்களின் மேல், பொலிந்து
தோன்றுமாறு விரித்துக் கட்டிய ஒளி பொருந்திய மரகத மேற்கட்டியில்
பொருத்தப் பெற்று, இருளைப் போக்கும் பலவகை மணிகள் போல, தன்
இடப்பரப்பு முழுவதும் செறிந்த ஒளியைக் கொண்டுள்ள பல நிற மலர்கள்
பூத்த சோலையின் அழகு விளங்கித் தோன்றும்.

     'விளங்கித் தோன்றும்' என்ற தொடர் வருவித்து முடிக்கப்பட்டது.
அடிமரத்தைப் பவளத் தூணாகவும், கிளைகளோடு செறிந்த தழைகளை
மரகதப் படமாகவும், பூத்த பல வகை மலர்களைப் பலவகை மணிகளாகவும்
கொள்க.

                3
திறைசுமந் தடிதொழுந் தெவ்வர் போன்மது
நறைசுமந் திணர்க்குடஞ் சுமந்த நாண்மலர்
நிறைசுமந் திரும்பொழி னெரிந்த புள்ளினம்
பறைசுமந் தடித்தெனப் பாடு மோதையே.
 
திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல், மது
நறை சுமந்த இணர்க் குடம் சுமந்த நாள் மலர்
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம்,
பறை சுமந்து அடித்து என, பாடும் ஓதையே.

     மன்னனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தைச் சுமந்து வந்து
அடி தொழும் பகைவர் போல், தேனின் நறுமணத்தைத் தாங்கி நிற்கும்
மலர்களாகிய குடத்தைச் சுமந்த புது மலர்களை நிறைவாகச் சுமந்து
நிற்கும் பெரிய சோலைகளில் வந்து செறிந்த பறவை இனங்கள் பாடும்
ஓசை, பறையைச் சுமந்து அடித்தெழுப்பிய ஓசைபோல் தோன்றும்.

     'தோன்றும்' என்ற சொல் வருவித்து முடிக்க, சுமந்த+இணர் -
சுமந்தவிணர் என்பது 'சுமந்திணர் எனவும், சுமந்த+இரும் - சுமந்தவிரும்
என்பது 'சுமந்திரும்' எனவும் தொகுத்தல் விகாரம் கொண்டன.

                 4
தேமொழிக் கிள்ளையுஞ் செம்பொற் பூவையும்
பாமொழிக் கையிலும் பண்செய் தேனொடு
பூ மொழித் தும்பியு மருளிப் பொங்கொலி
நாமொழிக் கீதம்போ னரலப் போயினார்.