பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்265

நவி வரி நகுலமும், நாவிப் பிள்ளையும்
கவி வரி நிபுடமும், கானக் கோழியும்,
சவி வரி நவிரமும், களபத் தந்தியும்
குவி வரி மலைச் சரி குதிப்பப் போயினார்.

     அழகிய வரிகளை உடைய கீரிகளும், கத்தூரி மான் குட்டியும்,
கவி என ஒரு பெயர் பெறும் அணிஅணியான குரங்குகளும், காட்டுக்
கோழிகளும், தெளிந்த கோடுகளைச் சிறகிற் கொண்ட மயில்களும்,
யானைக் கன்றுகளும் குவிந்து கிடந்த வரிசையான மலைச்
சரிவுகளிடையே குதித்த வண்ணமாயிருக்க இவர்கள் போயினர்.

     சரி - சரிவு என்பதன் கடைக்குறை.

                7
மட்டிடை யலந்தையு மலர்பெய் சோலையு
நட்டிடை யணிவய னாடுங் குன்றமு
நெட்டிடை நெறிகளு நீந்திக் கான்பொழி
மொட்டிடை நிழற்பொழின் முழைக்க
                         ணெய்தினார்.
 
மட்டு இடை அலந்தையும், மலர் பெய்
                          சோலையும்,
நட்டு இடை அணி வயல் நாடும், குன்றமும்,
நெட்டு இடை நெறிகளும் நீந்தி, கான் பொழி
மொட்டு இடை நிழல் பொழில் முழைக் கண்
                          எய்தினார்.

     தேன் இடம் பெற்றுள்ள தடாகங்களையும், மலர்கள் மதுவைப்
பொழியும் சோலைகளையும், இடையே பயிர் நட்டு அழகுடன்
விளங்கும் வயல்களைக் கொண்ட நாட்டுப் பகுதிகளையும், மலைகளையும்,
நீண்டு கிடந்த இடை வழிகளையும் கடந்து, வாசனை பொழியும் மலர்
மொட்டுக்களிடையே குளிர்ந்த நிழல் கொண்ட சோலையில் ஒரு குகையின்
அருகே சென்று சேர்ந்தனர்.

               8
நண்பக னெற்றிவா னடக்குங் காலையாழ்
மண்பக வூன்றிமேன் மலர்ந்த பூஞ்சினைச்
செண்பக நிழற்றிய மணறண் டிண்னைமே
லொண்பக லொத்தொளிர்ந் துவந்து வைகினார்.