பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்269

"தோடு உண்ட மணிப் பைம் பூந் தார்ச் சூசையே, நீயும் திங்கள்
கோடு உண்ட பதத்தினாளும் குழவியாய்ப் பேணும் நாதன்
ஈடு உண்ட திறமும், பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை
கேடு உண்ட திறமும் காட்டக் கிளைத்தது ஈங்கு உரைப்பல்;
                                             கேள்மோ :

     "இதழ்ச் செறிவு கொண்ட அழகிய பசுமையான மலர்கள் பூத்த
கொடியைக் கொண்டுள்ள சூசையே, நீயும் கொம்புள்ள பிறை மதியைத்
தாளில் கொண்டுள்ள மரியாளும் குழந்தையாய்க் கொண்டு பேணும்
இவ்வாண்டவனின் ஈடெல்லாம் கடந்த வல்லமையையும், பெண்ணின் இன்பம்
என்று மனத்தை இருளச் செய்யும் ஆசை கேடு விளைவித்த தன்மையையும்
விளக்கிக் காட்டும் பொருட்டு, இங்கு நிகழ்ந்ததனை எடுத்துரைப்னே்; நீ
அதனைக் கேள்;

     'திங்கள் கோடு உண்ட பதம்' என்பதனை, 'கோட்டுத் திங்கள்
உண்ட பதம்' என்று மாற்றுக. கேண்மோ - கேள்: 'மோ' முன்னிலையசை.

                     15
சேமஞ்சால் திறத்து நாதன் சிறுமையிற் பெருமை காட்ட
வாமஞ்சால் மணியிற் சென்னி மயிர்ப்புலத் தொத்தித் தந்த
தாமஞ்சால் திறத்தி னாண்மை தாங்கிய சஞ்சோ னென்பா
னாமஞ்சால் வழங்கத் தோர்வை நவைபெறா வரம்பெற் றுற்றான்.
 
"சேமம் சால் திறத்து நாதன், சிறுமையின் பெருமை காட்ட,
வாமம் சால் மணியின் சென்னி மயிர்ப் புலத்து ஒத்தித் தந்த
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான்,
நாமம் சால் வழங்க, தோர்வை நவை பெறா வரம் பெற்று உற்றான்.

     "கெடாத பாதுகாப்பு நிறைந்த வல்லமையுள்ள ஆண்டவன்,
சிறுமையின் மூலம் தனது பெருமையைக் காட்ட மனங் கொண்டு, அழகு
நிறைந்த நீல மணியைப் போன்ற தலை மயிரிடத்துப் பொருத்தித் தந்த
சிறப்பு மிக்க வலிமையாகிய வீரத்தைக் கொண்ட சஞ்சோன் என்பவன், தன்