பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்270

பெயர் இவ்வுலகில் மிகுதியாக நிலைக்கும் பொருட்டு, தோல்வி என்னும்
குற்றத்திற்கு ஆளாகாத வரத்தைப் பெற்று இங்கு வந்து பிறந்தான்.

     "சஞ்சோன் என்பவர்க்குத் தலை மயிர் இருக்குமளவும் வல்லமை
பாடின்றி வழங்கவும், அம்மயிர் அழிந்த காலத்து வலித் திறம் அழியவும்
ஆண்டவன் அவற்கு வரம் தந்தமையால், 'சென்னி மயிர்ப் புலத்து ஒத்தித்
தந்த வரம்' என்றார் என்க," என்பது பழையவுரையின் அடிக் குறிப்பு.

                     16
வல்லரிக் குழவி போன்றே வயத்தொடு பிறந்த தோன்றல்
செல்லரி தடலோ டோங்கிச் சிறுவனாய்ச் சிறுமை யின்றிப்
புல்லரி தகன்ற கானிற் புடைத்துணை யின்றிப் போகிற்
கொல்லரி யெதிர்ப்பக் கையாற் கொறியென வகிர்ந்து                                        கொல்வான்.
 
"வல் அரிக் குழவி போன்றே வயத்தொடு பிறந்த தோன்றல்
செல் அரிது அடலோடு ஓங்கி, சிறுவன் ஆய்ச் சிறுமை இன்றி
புல் அரிது அகன்ற கானில் புடைத் துணை இன்றிப் போகில்,
கொல் அரி எதிர்ப்ப, கையால் கொறி என வகிர்ந்து கொல்வான்.

     'வலிமை வாய்ந்த சிங்கக் குட்டி போன்று வலிமையோடு பிறந்த
அம்மகன், நீங்குதல் இல்லாத வலிமையோடு மேலும் ஒங்கி வளர்ந்து,
உருவத்தில் சிறுவனாய் இருந்தும் வலிமையில் எக்குறையும் இன்றி,
நெருங்குதற்கு அரிதாய்ப் பரந்து கிடந்த காட்டில் பக்கத் துணை
ஒன்றுமின்றிப் போய்க் கொண்டிருக்கையில், கொல்லும் தன்மையுள்ள
அரிமாவொன்று தன்னை எதிர்க்கவே, அதனைப் பல்லால் கொறித்த
தன்மை போல் கையால் கிழித்துக் கொன்றான்.

                      17
தனித்திருத் தகவோன் றந்த தனித்திற லவன்மாற் றார்மே
லினித்திருத் திடனன் றென்ன வீங்குண்ட பீலித் தேயர்
பனித்திருத் தடத்துத் தந்த பழமறை பகைத்தா ரென்ன
முனித்திருத் திறத்த சஞ்சோன் மொய்செய வளவின் மாய்ந்தார்.