19 |
எண்டிசை
சம்பு மோட வெண்டிசை பொறித்தீச் சிந்த
மண்டிசை வளியும் வீச மண்டிசை கொழுந்துத் தீயால்
விண்டிசை மலர்த்தண் காவும் விண்டிசை தவழ்நெற்
போரும்
பண்டிசை பகைவர் நாடும் பழிபழுத் தெரிந்த தன்றே. |
|
"எண் திசை சம்பும்
ஓட, எண் திசை பொறித் தீ சிந்த,
மண்டு இசை வளியும் வீச, மண்டு இசை கொழுந்துத் தீயால்
விண்திசை மலர்த் தண் காவும் விண் திசை தவழ் நெற்
போரும்
பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றே. |
"எட்டுத் திசைகளிலும்
அந்நரிகளும் ஓடவே, எட்டுத் திசைகளிலும்
தீப் பொறிகள் சிதறி விழுந்தன. பெருகிய இரைச்சலோடு காற்றும் வீசவே,
பெருகிய இரைச்சல் கொண்ட தீக் கொழுந்தினால் வானத்தை அளாவிய
குளிர்ந்த மலைச் சோலைகளும் மேகங்கள் அவ்விடத்து இறங்கி வந்து
தவழும் நெற் போர்களும் பண்டை நாளில் புகழ் கொண்டு விளங்கிய
பகைவர் நாடும் தமக்குப் பழி முதிருமாறு எரிந்தன.
'அன்றே' அசை
நிலை. 'காவும் போரும் நாடும்' என்ற பன்மை
எழுவாய்க்கு 'எரிந்தது' என்ற ஒருமைப்பயனிலை தொகுதி கருதி வந்த
வழுவமைதி என்க.
20 |
முனிப்பட்டார்
பீலித் தேயர் மொய்ப்படை யின்றி யோர்நாள்
தனிப்பட்டான் சஞ்சோ னென்னத் தாம்வய வரிகள் போல
வினிப்பட்டா னென்று சீறி யெண்ணிலா ரவனைச் சூழ்ந்து
தொனிப்பட்டார்த் தரிய போரைத் தொடங்கினார் வயிரத்
தோளார். |
|
"முனிப் பட்டார்
பீலித் தேயர். மொய்ப் படை இன்றி ஓர் நாள்
தனிப் பட்டான் சஞ்சோன் என்ன, தாம் வய அரிகள் போல,
'இனிப் பட்டான்!' என்று சீறி, எண் இலார் அவனைச் சூழ்ந்து,
தொனிப் பட்டு ஆர்த்து, அரிய போரைத் தொடங்கினார், வயிரத்
தோளார். |
|