"அது கண்டு பிலித்தேயர்
சினங் கொண்டனர். ஒருநாள்
போருக்குரிய கருவி ஒன்றுமின்றிச் சஞ்சோன் தனிப்பட்டான் என்று
கண்டு, வைரம் போல் உறுதியான தோள்களை உடைய பிலித்தேயர்
எண்ணற்றவர் அவனைச் சூழ்ந்து, 'இனிச் சஞ்சோன் செத்தான்!' என்று
சீறிய வண்ணம், வலிமை வாய்ந்த அரிமாக்கள் போல ஓசை
உண்டாகுமாறு ஆரவாரம் செய்து அரிய போரைத் தொடங்கினர்.
'இனிப் பட்டான்'
என்றவிடத்து, 'பட்டான்' என்ற இறந்த காலம்,
இறத்தல் உறுதி என்பது பற்றி வந்த கால வழுவமைதி.
21 |
வீங்கினான்
வெறுங்கைச் சஞ்சோன் விளிந்தவே சரிவா
யென்பும்
வாங்கினான் வயிரத் தண்ட வயப்படை யென்னச் சீறி
யோங்கினா னரும்போராக வொன்னலர் படைக ளெல்லாந்
தாங்கினா னரியே றன்ன தாக்கினான் பகைவர் மாள்க. |
|
"வீங்கினான்
வெறுங் கைச் சஞ்சோன்; விளிந்த வேசரி வாய்
என்பும்
வாங்கினான் வயிரத் தண்ட வயப் படை என்ன; சீறி
ஓங்கினான்; அரும் போராக ஒன்னலர் படைகள் எல்லாம்
தாங்கினான்; அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க. |
"வெறுங் கையாய்
நின்ற சஞ்சோன் அது கண்டு வீறு கொண்டான்;
இறந்த கழுதையின் வாய்த்தாடை எலும்பை உறுதியான வலிமை வாய்ந்த
தண்டாயுதத்திற்குச் சமமாகக் கையில் எடுத்துக்கொண்டான். பகைவர்
மீது சீறிக் கருவியை ஓங்கினான்; அரிய போராகப் பகைவர்
படைகளையெல்லாம் தான் ஒருவனாகவே தடுத்துத் தாங்கி நின்றான்;
பகைவர் மடியுமாறு ஆண் அரிமா போலத் தாக்கினான்.
22 |
அதிர்த்தன னதிர வான மார்த்தனன் றனிவல்மொய்ம்பான்
விதிர்த்தன னரிய தண்டம் வீசின னெண்ணி லாவி
யுதிர்த்தன னுதிர வெள்ள மோடவெங் கதக்கண் வாயுங்
கதிர்த்தழ லோட வோடிக் கதக்கனத் துருமின் மிக்கான். |
|