பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்274

"அதிர்த்தனன் அதிர வானம், ஆர்த்தனன், தனி வல்
                                    மொய்ம்பான்;
விதிர்த்தனன் அரிய தண்டம், வீசினன், எண் இல் ஆவி
உதிர்த்தனன்; உதிர வெள்ளம் ஓட, வெங்கதக் கண் வாயும்
கதிர்த் தழல் ஓட, ஓடி, கதக் கனத்து உருமின் மிக்கான்

     "ஒப்பற்ற தெய்வ வல்லமையைத் தனக்கு வல்லமையாகக்
கொண்டுள்ள சஞ்சோன், வானமும் அதிரும்படி முழங்கி ஆரவாரம்
செய்தான்; அரிய எலும்பாகிய தண்டாயுதத்தை அசைத்து வீசி, எண்ணற்ற
உயிர்களை உதிரச் செய்தான்; களத்தில் உதிர வெள்ளம் ஓடவும், கொடிய
சினங்கொண்ட தன் கண்களிலும் வாயிலும் கதிர் விடும் நெருப்புப் பாய்ந்து
ஓடவும், அங்குமிங்கும் ஓடி, சினங் கொண்ட மேகத்தில் தோன்றும்
இடியினும் மேம்பட்டவன் ஆனான்.

                  23
இந்திணை குனிவில் சிந்த வீர்க்கடை பகழி சிந்தக்
கந்திணை கரங்கள் சிந்தக் கரியநெய் மூளை சிந்தப்
பந்திணை சிரங்கள் சிந்தப் பல்லுயி ருடலஞ் சிந்த
சிந்தினை யெவருஞ் சிந்தச் சிந்தின குருதிச் சிந்தே.
 
"இந்து இணை குனி வில் சிந்த, ஈர்க்கு அடை பகழி சிந்த,
கந்து இணை கரங்கள் சிந்த, கரிய நெய் மூளை சிந்த,
பந்து இணை சிரங்கள் சிந்த, பல் உயிர் உடலம் சிந்த,
சிந்தினை எவரும் சிந்தச் சிந்தின குருதிச் சிந்தே.

     "பிறை மதிக்கு இணையாகப் பகைவர் வளைத்த வில்லுகள் ஒடிந்து
வீழவும், சிறகு பொருந்திய அம்புகள் சிதைந்து வீழவும், மூட்டோடு
பொருந்திய கைகள் அறுந்து வீழவும், கரிய உதிரத்தோடு மூளை சிதறி
வீழவும், பந்துபோல் தலைகள் அறுந்து வீழவும், பல உடல்களினின்று
உயிர் சிதையவும், எவரும் சிந்தனைத் திறம் இழந்து நிற்கவுமாகக் கருதி
ஆறுகள் பாய்ந்து ஓடின:

     சிந்து - முதற்கண் 'சிந்தனை' என்ற சொல்லின் கடைக்குறை;
இறுதியில் ஆறு,

                  24
ஆயின தன்மைத் தங்க ணாயிர முருமிற் பாய்ந்து
பாயின விடங்க டோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை
வீயின பகைவ ரங்கண் விழுந்தவா யிரரு மன்றி
யோயின வமர்விட் டோடி யுடற்குறை யிலரு முண்டோ.