பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்275

"ஆயின தன்மைத்து, அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து,
பாயின இடங்கள் தோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை
வீயின பகைவர் அங்கண் விழுந்த ஆயிரரும் அன்றி,
ஓயின அமர் விட்டு ஒடி, உடல் குறை இலரும் உண்டோ?

     "இவ்வாறான தன்மையாக, அங்கு ஆயிரம் இடிகள் போல அவன்
பாய்ந்து, பாய்ந்த இடந் தோறும் பிணக்குவியலைப் பரப்பினான்: அங்கு
இறந்து விழுந்த பகைவர் ஆயிரம் பேரும் அல்லாமல், ஓய்ந்து போரை
விட்டு ஒடியும், தங்கள் உடலுக்கு ஏதேனும் ஒரு குறை இல்லாது
தப்பியவரும் உண்டோ?

                      25
புறத்துணை கடந்த வல்லோன் போர்க்களத் தொருவ னின்று
திறத்துணை வரைத்தோள் வீங்கித் திசைதிசை சுளித்து நோக்கி
மறத்துணை துணையென் றுற்ற வஞ்சக ரோடக் கண்டே
யறத்துணை பெற்றாற் பெற்ற தழிவுண்டோ விடையி லென்றான்.
 
"புறத்துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று,
திறத்துணை வரைத் தோள் வீங்கி, திசை திசை சுளித்து நோக்கி,
மறத் துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓடக் கண்டே,
'அறத் துணை பெற்றால், பெற்றது அழிவு உண்டோ இடையில்?'
                                              என்றான்.

     "புறத்தே தனக்கு ஒப்பறக் கடந்த வல்லவனாகிய சஞ்சோன்
போர்க்களத்தில் தான் ஒருவனாகத் தனித்து நின்று, தன் வலிமைக்குத்
துணையாய் அமைந்த மலை போன்ற தோள்கள் பூரிக்க, திசைக்குத் திசை
மாறி மாறிச் சினந்து நோக்கி. தம் வீரத்தின் துணையே துணையென்று
கருதிப் போருக்கு வந்த வஞ்சகர் சிதறி ஓடக் கண்டு, 'அறத்தின்
துணையைப் பெற்றிருப்பின், பெற்ற அது இடையில் அழிவது உண்டோ?'
என்றான்.

                      26
கார்த்திர ளனைய வார்த்த கதத்தொடு கனலும் விம்மிப்
போர்த்திர ளியற்றி னானுட் புலத்தெழுந் தாக மாற்றா
சூர்த்திரள் பயத்த தண்டஞ் சுனையினூற் றெனவென்
                                     பின்வாய்
நீர்த்திர ளோடச் சால்பின் னிமலனை வாழ்த்தி யுண்டான்.