பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்277

                     28
தற்றொழில்செய் தாயினபின் னன்னான் போகத் தாமமணிக்
கற்றொழில்செய் வாய்க்கதவ மடைத்த தென்னக்
                                 கண்டொன்னார்
புற்றொழில்செய் வலியிதுவோ வென்ன நக்குப் பொற்கதவ
மற்றொழில்செய் புயத்தெடுத்தம் மலைமே லுய்த்தான்
                                 மயிர்த்திறத்தான்.
 
"தன் தொழில் செய்து ஆயின பின், அன்னான் போக தாம மணிக்
கல் தொழில் செய் வாய்க் கதவம் அடைத்தது என்னக் கண்டு,                                              'ஒன்னார்
புன் தொழில் செய் வலி இதுவோ!' என்ன நக்கு, பொற் கதவம்
மல் தொழில் செய் புயத்து, அம் மலை மேல் உய்த்தான் மயிர்த்                                              திறத்தான்.

     "தலைமயிரிடத்துத் தன் வலிமையைக் கொண்டிருந்த சஞ்சோன்,
அங்கே தான் செய்ய வேண்டிய தொழிலைச் செய்து முடித்த பின்,
வெளியே போக அவன் முற்படுகையில், ஒளி பொருந்திய மணிகள்
பதித்துக் கல் நிலைகளில் பொருத்தியிருந்த வாயிற் கதவு
அடைக்கப்பட்டுள்ளதென்று கண்டு, 'பகைவர் தம் அற்பச் செயலுக்குத்
துணை செய்யும் வலிமை இது தானோ!' என்று நகைத்து, அப்பொற்கதவை
மல் தொழிலுக்கு உரிய தன் புயத்தால் பிடுங்கி எடுத்து, அதோ தெரியும்
மலைமேல் கொண்டு வைத்தான்.

                     29
போர்முகத்து நிகரின்றிப் பொலிந்த வெற்றி புனைந்துயர்ந்தோன்
கார்முகத்து மணிக்கூந்தல் வலைப்பட் டோர்பூங் கவினல்லா
ளேர்முகத்து வயங்குழையச் சிதைந்த தன்மை யினிக்கேட்டோர்
பார்முகத்துப் பெண்மையினோர் பழியுங் கேடு மிலையென்பார்.
 
"போர் முகத்து நிகர் இன்றிப் பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன்,
கார் முகத்து மணிக் கூந்தல் வலைப் பட்டு, ஓர் பூங் கவின் நல்லாள்
ஏர் முகத்து வயம் குழையச் சிதைந்த தன்மை இனிக் கேட்டோர்,
'பார் முகத்துப் பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை!' என்பார்.