"போரிடத்து
எவரும் தனக்கு நிகரில்லாதவாறு பொலிந்த
வெற்றிகளை அணிந்து உயர்ந்தவனாகிய சஞ்சோன், கருமேகம் போன்ற
நீல மணிக் கூந்தலாகிய வலையில் அகப்பட்டு, ஒரு பூப் போன்ற அழகிய
பெண்ணின் அழகு முகத்தெதிரே தன் வலிமை குழைந்ததனால் அழிந்த
தன்மையை இனிக் கேட்டறிந்தோர், 'இம்மண்ணுலகில் பெண்மையைப்
போல் ஒப்பற்ற பழியும் கேடும் விளைவிப்பது எதுவுமே இல்லை!' என்பர்.
30 |
கடம்புனைந்த
வளையுருட்டும் பெருஞ்சீர்ச் செங்கோற்
கடிவளமுஞ்
சடம்புனைந்து பெண்ணாசைச் சழக்கிற் கோலு மென்றுணரான்
விடம்புனைந்த நலம்பொறித்த விலைமா தென்னுந் தாலிலையோர்
நடம்புனைந்த வரிவையின்மே னவையுற் றெஞ்ச
நசைவைத்தான். |
|
"கடம் புனைந்த
வளை உருட்டும் பெருஞ் சீர்ச் செங்கோல் கடி வளமும்
சடம் புனைந்து பெண் ஆசைச் சழக்கில் கோலும் என்று உணரான்,
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர்
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான். |
"நீதி பொருந்திய
ஆணைச் சக்கரத்தை உருட்டும் பெருஞ்
சிறப்புள்ள செங்கோலின் ஒளி வளமும் பெண்ணாசை என்னும்
கொடுமையால் குற்றத்திற்கு ஆளாகி வளையும் என்று உணராதவனாய்,
நஞ்சைப் பொதிந்து மூடிய அழகு பொறிக்கப்பட்ட விலைமகளாகிய
தாலிலை என்னும் நடனக் கலை தேர்ந்த ஒரு பெண்ணின் மீது தனக்குக்
குற்றம் பொருந்திக் கேடு விளையுமாறு ஆசை வைத்தான்.
31 |
காதளவு நீண்டுலவுங் களிக்கண் மாமை கனிந்துண்ட
போதளவு காதலுளங் கோட்டி யன்னாட் புணரியினாழ்
கோதளவு மனமூழ்கி நிலையுங் கொள்ளா குலைந்தலைதன்
றீதளவு மனமயங்கிச் சிறைப்பட் டத்தீச் சிறைவிள்ளாள். |
|