பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்279

"காது அளவு நீண்டு உலவும் களிக் கண் மாமை கனிந்து உண்ட
போது அளவு காதல் உளம் கோட்டி, அன்னாள் புணரியின் ஆழ்
கோது அளவு மனம் மூழ்கி, நிலையும் கொள்ளா குலைந்து, அலை தன்
தீது அளவு மனம் மயங்கிச் சிறைப்பட்டு, அத் தீச் சிறை விள்ளான்.

     "காது வரைக்கும் நீண்டு நிலை கொள்ளாது உலாவும் காமக்
களிப்புள்ள அவள் கண்ணழகைக் கனிந்து உண்ட பொழுதின் அளவாகத்
தானும் காதலால் உள்ளம் கோணலாகி, அப்பெண் என்னும் கடலில்
ஆழ்ந்து கிடந்த குற்றங்களின் அளவாகத் தன் மனம் மூழ்கிக் கிடந்து,
அக்கடலில் நிலைகொள்ள இயலாதவாறு மூழ்கிக் குலைந்து, அலையும்
தன் தீமைக்கு அளவாக மனம் மயங்கிச் சிறைப்பட்டு, அந்தத் தீய
சிறையை விட்டு நீங்க இயலாதவன் ஆனான்.

                      32
அண்ணிப்பற் றன்பறிந்த வரிகர் பொற்சால் பளித்தன்னா
ணண்ணிப்பற் றருந்திறத்தின் னிலைகே ளென்ன நனிகேட்டா
ரெண்ணிப்பத் தங்கையிடு மெல்வை நட்பு மியற்பிறப்புங்
கண்ணிப்பற் றாதென்னை கடிதிற் செய்யாள் பெண்பிறந்தாள்.
 
"அண்ணிப் பற்று அன்பு அறிந்த அரிகர், பொன் சால்பு அளித்து,
                                               அன்னாள்
நண்ணி, 'பற்று அரும் திறத்தின் நிலை கேள்' என்ன நனி கேட்டார்.
எண்ணிப் பத்து அங் கை இடும் எல்வை, நட்பும் இயல் பிறப்பும்
கண்ணிப் பற்றாது, என்னை கடிதின் செய்யாள் பெண் பிறந்தாள்?

     "நெருங்கிப் பற்றிய அவன் அன்பை அறிந்த பகைவர், அவளை
அணுகி, பொன் மிகுதியாகக் கொடுத்து, 'யாம் பற்றுவதற்கு அரிய
அவனது வலிமையின் நிலையைப் பற்றிக் கேள்' என்று மிகவும் கேட்டுக்
கொண்டனர். பெண்ணாய்ப் பிறந்தவள், தன் உள்ளங்கையில் பத்துப்
பணத்தை எண்ணிக் கொடுக்கும் வேளையில், பிறரோடு கொண்ட
நட்பையும் தன் இயல்பான