பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்280

     குடிப்பிறப்பையும் கருதி அவற்றைப் பற்றிக்கொண்டு நில்லாமல்,
அதன் பொருட்டு எதைத்தான் விரைந்து செய்யமாட்டாள்?

     'நிலை கேள்' என்றது, 'நிலை கேட்டு எமக்குச் சொல், என்னும்
பொருளில் நின்றது.

                      33
கோற்கலந்த கண்விருப்பங் குளிரக் காட்டிக் கொல்லகத்தாள்
பாற்கலந்த நஞ்சன்ன பணித்தீஞ் சொல்லாற் பகைக்கெஞ்சா
மேற்கலந்த வலிநிலையெங் கென்றாள் காதல் வெறுப்பாற்றா
மாற்கலந்த வன்பிறலை மயிர்க்க ணென்றான் மதிகெட்டான்.
 
"கோல் கலந்த கண் விருப்பம் குளிரக் காட்டி, கொல் அகத்தாள்,
பால் கலந்த நஞ்சு அன்ன பணித் தீம் சொல்லால், 'பகைக்கு எஞ்சா
மேல் கலந்த வலி நிலை எங்கு?, என்றாள். காதல் வெறுப்பு ஆற்றா
மால் கலந்த அன்பின், 'தலை மயிர்க்கண்' என்றான், மதி கெட்டான்.

     "பணத்தின் பொருட்டுக் கொல்லும் மனம் படைத்த தாலிலை,
அம்போடு ஒத்த தன் கண்ணால் தன் விருப்பத்தைக் குளிரக் காட்டி,
பால் கலந்த நஞ்சு போன்ற பணிவான இனிய சொல்லால், 'பகைவருக்குக்
கெட்டு ஒழியாதவாறு உன்பால் பொருந்தியுள்ள வலிமை நிற்கும் இடம்
எங்கு?' என்றாள். காமத்தால் மதிகெட்ட சஞ்சோன், தன் காதலை அவள்
வெறுப்பதைப் பொறுக்க மாட்டாத மயக்கம் கலந்த அன்பினால், 'அது
என் தலைமயிரிடத்து உள்ளது' என்றான்.

                      34
முதிர்சூலும் பெண்காதின் மொழியு நில்லா முறையிலவள்
கதிர்சூழு முதயத்தன் றொன்னார்க் கெல்லாங் காட்டியபின்
பொதிர்சூழும் பின்னிரவி லின்பத் தன்னாள் பூமடிமே
லெதிர்சூழுங் கேடுணரான் றுஞ்ச மயிரீர்ந் திமிழ்த்தனரே.