பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்281

"முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா முறையில், அவள்
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின்,
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல்,
எதிர் சூழும் கேடு உணரான், துஞ்ச, மயிர் ஈர்ந்து, இமிழ்த்தனரே

     "முதிர்ந்த கருப்பமும் பெண் காதில் இட்டு வைத்த சொல்லும்
வெளிப்பட்டன்றி நில்லாத முறைப்படி, அன்றே பகலவனின் கதிர்கள்
சூழ்ந்து பரவும் விடியற் காலையில் அவள் பகைவர்க்கு எல்லாம்
எடுத்துக்காட்டியபின், தனக்கு எதிரே சூழ்ந்து கிடந்த கேட்டை
உணராதவனாய், இருள் நிறைந்து சூழும் பின்னிரவில் இன்பத்தோடு
அவள் மெல்லிய மடிமேல் அவன் துயில் கொண்டிருக்க, அப்பகைவர்
அவன் தலை மயிரை அரிந்து, அவனைக் கட்டி வைத்தனர்.

     'காட்டியது' என்றது, அவன் வலிமை தங்கும் இடத்தைச் சொல்லிக்
காட்டியதும், வலிமை அழிய முடித்தற்கு வழி
வகை காட்டியதும் என்க.

                      35
மின்னினா லெனவெரிக்கண் விழித்தி யாக்கை விடறேற்றா
னுன்னினான் கொலைநட்பில் வஞ்சித் தாளென் றுளத்தெஞ்சித்
துன்னினார் பழம்பழியா ருவப்பி லார்த்துச் சுடுநகைச்சொற்
பன்னினார் விழிகுடைந்தார் பன்னாட் கோறச் சிறைவைத்தார்.
 
"மின்னினால் என எரிக் கண் விழித்து, யாக்கை விடல் தேற்றான்
உன்னினான்; கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி,
துன்னினார் பழம் பழியார்; உவப்பில் ஆர்த்துச் சுடு நகைச்சொல்
பன்னினார்; விழி குடைந்தார்; பல் நாள் கோறச் சிறை வைத்தார்.