"மின்னினாற்
போலத் தன் நெருப்புப் போன்ற கண்களைத் திறந்து
நோக்கி, கட்டினின்று தன் உடலை விடுவித்துக் கொள்ள இயலாதவனாய்,
எப்படி இது நேர்ந்திருக்குமென்று எண்ணிப் பார்த்தான்; கொலை
நோக்குள்ள நட்பால் அவள் தன்னை வஞ்சித்தாளென்று கண்டு உள்ளம்
தளர்ந்தான். அப்பொழுது பழம் பழிக்கு ஆளான பகைவர் அங்கு வந்து
சேர்ந்தனர்; மகிழ்ச்சியோடு ஆரவாரஞ் செய்து, சுடுகின்ற ஏளனச்
சொற்களைப் பேசினர்; அவன் கண்களைக் குடைந்து பிடுங்கினர்; பின்
ஒரு நாள் கொல்லும் வண்ணம் பல் நாட்களாய்ச் சிறையில் இட்டு
வைத்தனர்.
விழித்து +
யாக்கை - 'விழித்தி யாக்கை' என, யகரம் வரக்
குற்றுகரம் இகரமாய்த் திரிந்தது. எனினும், 'விழித் தியாக்கை' எனக்
கொள்ளற்கு இடமின்றி, 'விழித்தி யாக்கை' என விட்டிசைத்தலின்,
குற்றியலிகரமாதற்கு இடமில்லை. 'எஞ்சி' என்பதனை 'எஞ்ச' என்ற 'செய'
என்னும் எச்சமாக்கிப் பொருள் கொள்க. கோற - 'கொல்தல்' என்பது,
'கோறல்' எனத் தொழிற் பெயரால் அமைதலின், 'சோறு' என்பதே பகுதி
போலக் கொண்டு, 'செய' என்னும் எச்சம் அமைக்கப்பட்டுள்ளது.
36 |
பன்னாளிற்
பன்னகையிற் பழியின் னாசைப் பற்றமர்ந்த
பின்னாளிற் பகைத்தனநா டொருப்பட் டொன்னார் பெரிதுவந்து
முன்னாளிற் செய்தவொர்மண் டபத்தில் வைகி முற்கொணர்கென்
றந்நாளிற் றிறஞ்சிகையோ டுடைச்சஞ் சோனு மாங்கடைந்தான். |
|
"பல் நாளில்
பல் நகையில் பழியின் ஆசைப் பற்று அமர்ந்த
பின் நாளில், பகைத்தன நாடு ஒருப்பட்டு, ஒன்னார் பெரிது உவந்து,
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி, 'முன் கொணர்க!' என்று,
அந் நாளில் திறம் சிகையோடு உடைச் சஞ்சோனும் ஆங்கு
அடைந்தான். |
"பல நாட்களாகப்
பல வகை ஏளனங்கள் செய்ததன் மூலம் பழி
வாங்கும் ஆசைப் பிடிப்பு அடங்கிய பின் நாளில், பகைத்த நாடுகளெல்லாம்
ஒன்றுபட்டு வந்து, அப்பகைவரெல்லாம் ஒருங்கே மகிழ்ந்து, முற்காலத்தில்
அமைக்கப்பட்ட ஒரு மண்டபத்தில் தாம் தங்கியிருந்து, 'அவனை முன்னே
|